தேடுதல்

மதகல்பா மறைமாவட்ட ஆயர் ரோலந்தோ ஆல்வாரெஸ், மதகல்பா மறைமாவட்ட ஆயர் ரோலந்தோ ஆல்வாரெஸ்,  (AFP or licensors)

ஆயர் ஆல்வாரெஸ் மற்றும் ஆயர் இசிதோரோ மோரோ விடுதலை

ஓராண்டிற்கும் மேலாக அரசுத்தலைவர் டேனியல் ஒர்த்தேகாவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆயர் ஆல்வாரேஸ் மற்றும் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ஆயர் இசிதோர் மோரா உடன் சேர்த்து மொத்தம் 19 பேர் விடுதலையாக்கப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நிகராகுவா நாட்டில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த ஆயர் ஆல்வாரெஸ், ஆயர் இசிதோரோ மோரோ மற்றும் அருள்பணியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் திருஅவையால் உரோம் நகருக்கு வரவேற்கப்பட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன

2022 ஆம் ஆண்டு முதல் நிகராகுவா அரசினால் சிறைவைக்கப்பட்டிருந்த மதகல்பா மறைமாவட்ட ஆயர் ரோலந்தோ ஆல்வாரெஸ், டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட சியுனா மறைமாவட்ட ஆயர் இசிதீரோ மோரா, 15 அருள்பணியாளர்கள், இரண்டு அருள்பணித்துவ மாணவர்கள் என 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிகராகுவா அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

நிகராகுவா அரசிற்கு எதிராக செயல்பட்டதாகக்கூறி ஓராண்டிற்கும் மேலாக அரசுத்தலைவர் டேனியல் ஒர்த்தேகாவினால் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆயர் ஆல்வாரேஸ் மற்றும் ஆயர் இசிதோர் மோரா உடன் சேர்த்து 19 பேர் விடுதலையாகியுள்ள நிலையில் வெனிசுலாவில் தங்கிய ஒருவரைத்தவிர மீதம் 18 பேர் உரோம் நகரத்திற்கு விருந்தினர்களாக திருஅவையால் வரவேற்கப்பட்டுள்ளனர்.

மதகல்பா மறைமாவட்ட ஆயரும், எஸ்தெல்லி மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான ஆயர் ஆல்வாரெஸ் அவர்கள், 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக் காவலில் இருந்த அவர் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் சிறையில் இருந்தார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சியுனா மறைமாவட்ட ஆயர் இசிதோரா மோரா கைது செய்யப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2024, 12:47