பிலிப்பீன்சில் சுரங்கத் தொழிலுக்கு எதிராக இறைவேண்டல் கூட்டம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிலிப்பீன்ஸ் நாட்டின் தலத் திருஅவை, ஒரு வரலாற்று சிறப்புமிக்க மற்றும், கனிமங்கள் நிறைந்த தீவில் சுரங்கத் தொழிலின் ஆபத்தான தாக்கங்களை எடுத்துக்காட்டும் விதமாக செபக் கூட்டம் ஒன்றை நடத்தியதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
ஜனவரி 20, கடந்த சனிக்கிழமையன்று, ஹோமோன்ஹோன் தீவில் நடைபெற்று வரும் சுரங்கத் தொழிலுக்கு எதிராக, கல்பயோக் மற்றும் கேட்டர்மன் மறைமாவட்டங்களுடன் இணைந்து, கிழக்கு சமர் மாநிலத்தில் உள்ள பொரோங்கன் மறைமாவட்டத்தால் "எரிக்கோ செபக் கூட்டம்" ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது என்று அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
நலமான சூழல் என்பது எந்தப் பணத்தையும் விட அதிக மதிப்புடையது என்று போரோங்கனின் ஆயர் Crispin Varquez அவர்கள் Guiuan நகரத்தில் உள்ள அமல உற்பவ அன்னை ஆலயத்தில் நிகழ்ந்த இச்செபக் கூட்டத் திருப்பலியின் மறையுரையின்போது கூறினார் என்றும், கிழக்கு சமர் மாநிலத்தில் ஹோமோன்ஹோன் மற்றும் மனிகானி ஆகிய இடங்களில் சுரங்கம் தோண்டுவதற்குத் தனது கடுமையான எதிர்ப்பை மீண்டும் பதிவுசெய்தார் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பிலிப்பீன்ஸ் நாடு கனிம வளங்கள் நிறைந்தது. கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்நாட்டில் ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி மதிப்புள்ள செம்பு, தங்கம், நிக்கல், துத்தநாகம் மற்றும் வெள்ளி இருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருப்புகளில் 5 விழுக்காடு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்