இறைவாக்கினர் எலியாவைத் தேடி வரும் வீரர்கள் இறைவாக்கினர் எலியாவைத் தேடி வரும் வீரர்கள் 

தடம் தந்த தகைமை – எலியாவும் அரசன் அகசியாவும்

அரசன் ஐம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், “கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!” என்றான்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திரும்பி வந்த தூதரை நோக்கி, அரசன், “ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?” என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள் மறுமொழியாக, “வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, ‘நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்லுங்கள்’ என்றார்” என்று கூறினர். அவன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து உங்களிடம் இவற்றை அறிவித்த ஆள் எப்படி இருந்தான்?” என்று கேட்டான்.

அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, “அவர் மயிரடர்ந்த மனிதர்; இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்” என்றனர். அப்பொழுது அவன், “அந்த ஆள் திஸ்பேயைச் சார்ந்த எலியாதான்!” என்றான். உடனே அரசன் ஐம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், “கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!” என்றான். எலியா ஐம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2024, 09:02