பாகிஸ்தானின் கிறிஸ்தவர்மீதான அவதூறு குற்றச்சாட்டு கைவிடப்பட்டது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான பணிகளுக்குத் தலைமைதாங்கும் கத்தோலிக்க ஆயர் Paul McAleenan அவர்கள், ஏழ்மையை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோருக்குப் பிரித்தானியாவின் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகப் பாராட்டியுள்ளார் என்று கூறியுள்ளது ICN செய்தி நிறுவனம்.
கிழக்கு இலண்டனில் உள்ள இயேசு சபை, புலம்பெயர்ந்தோர் பணியகத்தில், புலம்பெயர்ந்தோர், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஊழியர்களைச் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு தெரிவித்த ஆயர் McAleenan அவர்கள், இங்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளவர்களை நண்பர்கள் என்று அழைப்பது ஒரு அழகான அன்பின் வெளிப்பாடு என்றும், இவர்கள் இங்கே உண்மையான நட்பை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறியதாகவும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு.
ஆயர் McAleenan அவர்கள், இம்மையத்தில் இருந்தபோது ஆதரவற்ற புலம்பெயர்ந்தோருக்கு இலவச உணவு, உடை மற்றும் கழிப்பறைகளை வழங்கும் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகத்தின் தன்னார்வலர்களுடன் இணைந்துகொண்டார் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
மேலும், புலம்பெயர்ந்தோருக்குத் துணை நிற்கும் பொருட்டு, இத்தகையைப் பணியைத் தேர்ந்துள்ள உங்களுக்கு நான் மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்றும், தயவுகூர்ந்து, இந்தத் தவக்காலத்தில் அமைதி மற்றும் நல்வாழ்வு நிலவிட வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் ஆயர் McAleenan, அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் அச்செய்தி நிறுவனம் உரைக்கின்றது.
பிரித்தானிவுக்கான இயேசு சபையின் புலம்பெயர்ந்தோர் பணியகம், உணவு, தங்குமிடம் மற்றும் துயரநிலைக்கான மானியங்களை வழங்குகிறது. அத்துடன் தனது சமூகப் பணிகளுக்கிடையே, மக்கள் தங்கள் நிலைமைக்கு நீண்ட காலத் தீர்வைக் கண்டறிய உதவுவதற்கு சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்