தேடுதல்

புர்கினா பாசோ பகுதி மக்கள் புர்கினா பாசோ பகுதி மக்கள்  (AFP or licensors)

புர்கினா பாசோ பகுதியில் ஏற்பட்ட தாக்குதலினால் 15 பேர் இறப்பு

தவக்காலத்தில் நாம் செய்யும் செபம் மற்றும் தவ முயற்சிகள் நாட்டிற்கு அமைதியையும், பாதுகாப்பையும் தரட்டும். - ஆயர் Laurent Bifuré Dabire.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மேற்கு ஆப்ரிக்காவின் புர்கினா பாசோ பகுதியில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆயுதமேந்தியவர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலினால் ஏறக்குறைய 15 பேர் இறந்துள்ளனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் Laurent Bifuré Dabire.

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை புர்கினா பாசோவின் டோரி மறைமாவட்டத்தில் உள்ள எஸ்ஸகானே கிராமத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஆயுதமேந்தியவர்கள் தாக்குதல் நிகழ்த்தியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் டோரி மறைமாவட்ட ஆயர் Laurent Bifuré Dabire.

துன்பமான இத்தகைய சூழ்நிலையில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபிப்போம் என்றும், காயமடைந்தவர்கள் குணமடையவும், நாட்டில் மரணத்தையும் அழிவையும் தொடர்ந்து ஏற்படுத்துபவர்கள் மனமாற்றமடையவும் தொடர்ந்து செபிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் Dabire.

தவக்காலத்தில் நாம் செய்யும் செபம் மற்றும் தவ முயற்சிகள் நாட்டிற்கு அமைதியையும், பாதுகாப்பையும் தரட்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர் Dabire அவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் உடனிருப்பையும் வழங்குவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2024, 10:51