தேடுதல்

இரஷ்ய தாக்குதலின் பாதிப்புகள் இரஷ்ய தாக்குதலின் பாதிப்புகள்  (ANSA)

உக்ரைனுக்காக செபிக்கும் கானடா கிறிஸ்தவர்கள்

போரில் உக்ரைன் குழந்தைகள் அவர்களின் வீடுகளிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் பிரித்தெடுக்கப்படுவது போன்றவை தொடர்ந்து இடம்பெறுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டின் அமைதிக்காக கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யுமாறு கானடாவின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவ அமைப்புக்களும் ஒன்றிணந்து மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இம்மாதம் 24ஆம் தேதி, சனிக்கிழமையன்று, இரஷ்யா உக்ரைனை ஆக்ரமிக்கத் துவங்கியதன் இரண்டாமாண்டு நிறைவுறுவதை முன்னிட்டு மெய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கானடாவின் ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்க, மற்றும் புரோட்டஸ்டாண்டு கிறிஸ்தவ சபைகள், உக்ரைன் மக்களின் துன்பங்களை மனதில் கொண்டு, அப்பகுதிக்கான அமைதிக்காக கானடா கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, இந்த உக்ரைன் போரால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது என்பதையும் நினைவூட்டியுள்ளன.

அப்பாவி பொதுமக்களின் உடைமைகள் சேதமாக்கப்படுவது, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது, அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவது போன்றவைகளையும் தாண்டி, குழந்தைகள் அவர்களின் வீடுகளிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் பிரித்தெடுக்கப்படுவது போன்றவை தொடர்ந்து இடம்பெறுவதாக கவலையை வெளியிட்டுள்ளது கானடா கிறிஸ்தவ சபைகளின் அறிக்கை.

2014ஆம் ஆண்டிலிருந்தே இரஷ்ய உக்ரைன் மோதல்கள் இடம்பெற்று வருகின்றபோதிலும், 2022 பிப்ரவரி மாதத்திலேயே முழு ஆக்ரமிப்பு இரஷ்யாவால் நடத்தப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2024, 14:39