இந்திய பொதுநிலையினருக்கு உதவும் திருஅவை சட்ட படிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
CCBI எனப்படும் இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவையால் நடத்தப்பட்ட, திருஅவை சட்டம் குறித்த ஒராண்டு பட்டயச் சான்றிதழ் படிப்பில் கலந்துகொண்டோருக்கு கர்தினால் Filipe Neri Ferrao அவர்களால் கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023ஆம் ஆண்டு டிசம்பர் வரை இடம்பெற்ற இந்த பட்டயப்படிப்பு, திருஅவை வாழ்வில் ஒருங்கிணந்த பயணத்தை பலப்படுத்தும் நோக்கத்தில், ஒன்றிப்பு, பங்கேற்பு, மற்றும் மறைப்பணி ஆகியவைகளில் பொதுநிலையினருக்கு ஊக்கமும் சக்தியும் கொடுப்பதாக இருந்தது.
இந்த ஓராண்டு பட்டயப் படிப்பில் கலந்துகொண்டோருக்கென ஏற்பாடுச் செய்யப்பட்ட பட்டமளிப்பு விழாவில், அனைவருக்கும் கல்விச் சான்றிதழ்களை வழங்கினார் CCBI ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Filipe Neri.
இந்த இணையவழி பட்டயப் படிப்புக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வில் CCBI ஆயர் பேரவையின் திருஅவை சட்ட அவையின் தலைவர், ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார்.
பெங்களூருவில் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவிற்கும், திருஅவைச் சட்டம் குறித்த ஓராண்டு இணையவழிக் கல்விக்கும், இவ்வவையின் நிர்வாக செயலர், அருள்முனைவர் மெர்லின் ரெஞ்சித் அம்புறோஸ் அவர்கள் ஏற்பாடுச் செய்து அவைகளை நடத்தவும் செய்தார்.
அருள்முனைவர் மெர்லின் அவர்கள், இவ்வவையின் நிர்வாகச் செயலராக இருக்கும் அதேவேளையில், பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருமடத்தில் திருஅவைச் சட்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்