மத்திய ஆப்ரிக்க ஆயர்களின் அமைதி முயற்சிகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பகுதி, ருவாண்டா, புருண்டி ஆகிய நாடுகளின் பாதுகாப்பற்ற நிலைகள், வன்முறைகள் பற்றிப் பேசும்போது, இவைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் 50 இலட்சம் முதல் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் குறித்துப் பேசுகிறோம் என தெரிவித்துள்ளனர் இந்நாடுகளின் ஆயர்கள்.
மத்திய ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான ஆயர் José Moko பத்திரிகையாளர்களிடம் உரைக்கையில், காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதி பிரச்னைகளுக்கு ருவாண்டாவே காரணம் என்ற பலரின் குற்றச்சாட்டை ருவாண்டா ஆயர்கள் அதிக அக்கறையுடன் செவிமடுத்தள்ளதாகவும், தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் கூறினார்.
காங்கோ குடியரசில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், 90,000 புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள முகாம்களையும் புருண்டி, ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசின் ஆயர்கள் இணைந்து சென்று பார்வையிட்டதாக உரைத்த ஆயர் Moko அவர்கள், அனைத்து ஆயர்களும் மத்திய ஆப்ரிக்கப் பகுதியில் அமைதி வாழ்வையே விரும்புவதாகவும்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்