தேடுதல்

ஆயர் Pierre-André Dumas ஆயர் Pierre-André Dumas  

ஹெய்ட்டியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஆயர் Dumas காயம்!

அண்மைய நாட்களில், இடைக்கால பிரதமர் Ariel Henry அவர்களைப் பதவி விலகக் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களின்போது ஹெய்ட்டியின் முக்கிய நகரங்களில் அமைதியற்ற சூழலே நிலவியது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

Anse-à-Veau-Miragoâne இன் ஆயரும் மற்றும் ஹெய்ட்டி ஆயர்கள் பேரவையின் துணைத் தலைவருமான Pierre-André Dumas அவர்கள், பிப்ரவரி 18, இஞ்ஞாயிறன்று, அவர் தங்கியிருந்த வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தார் என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அந்நாட்டு ஆயர் பேரவையின் நிரந்தர துணை செயலாளரான அருள்பணியாளர் Jean Rodney Brévil அவர்கள் கையெழுத்திட்டுள்ள ஆயர் பேரவையின் இந்த அறிக்கையில் ஆயர் Dumas அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், நாட்டின் மேற்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைய நிகழ்வுகளில், Port-au-Prince மற்றும் Mirebalais இடையே பயணிகளை ஏற்றிச் சென்ற சிற்றுந்து மீது ஆயுதமேந்திய குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் என்றும், கிடைக்கப்பெற்ற முதல் தகவலின்படி ‘400 Mawozo’ என்ற குற்றக் கும்பலின் சில உறுப்பினர்கள் இச்சம்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹெய்ட்டி, எல்லைக் கட்டுபாட்டுப் பகுதிக்காகப் போட்டியிடும் பல்வேறு கும்பல்களின் வன்முறையின் பிடியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது என்றும், இரண்டு ஆண்டுகளில் நடந்த மோதல்களின்போது, குறைந்தது 1,108 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் மற்றும் பலர் கடத்தப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2024, 13:43