தேடுதல்

சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிலுவையில் அறையப்பட்ட இயேசு  

நேர்காணல் - இயேசுவின் இறுதி ஏழு வார்த்தைகள்

மகிழ்வில் சொல்லப்படும் வார்த்தைகள் ஆக்கத்தையும், கோபத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் அழிவையும் தருகின்றன. இயேசு கூறிய வார்த்தைகள் அனைத்தும் வாழ்வு தரும் வார்த்தைகளாக நமக்கு அன்றாடம் உதவி வருகின்றன.
நேர்காணல் - அருள்முனைவர். ரமேஷ் அந்தோணி

மெரினா ராஜ் – வத்திக்கான்

வார்த்தைகள் வலிமையானவை. சிலரின் வார்த்தைகள் வாழ்வைக் கொடுக்கும். சிலரின் வார்த்தைகள் வாழ்வைக் கெடுக்கும். வார்த்தைகளுக்கு வலிமை உண்டு அவை, மகிழ்வில் சொல்லப்படும் வார்த்தைகள் ஆக்கத்தையும், கோபத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் அழிவையும் தருகின்றன. இயேசு கூறிய வார்த்தைகள் அனைத்தும் வாழ்வு தரும் வார்த்தைகளாக நமக்கு அன்றாடம் உதவி வருகின்றன. அதிலும் அவரது வாழ்வின் இறுதியில் அவர் கூறிய ஏழு வார்த்தைகள், நமது வாழ்க்கைக்கான பாடங்களாக அமைந்தன. தந்தையே இவர்களை மன்னியும், இன்றே நீ என்னோடு வான் வீட்டில் இருப்பாய், இதோ உம் தாய், இதோ உம் மகன், ஏலி ஏலி லாமா சபக்தானி என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர். தாகமாயிருக்கின்றேன், எல்லாம் நிறைவேறிற்று, தந்தையே உம் கைகளில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னும் வலிமை மிகுந்த ஏழு வார்த்தைகளானது நமது கிறிஸ்தவ வாழ்விற்கு ஊட்டமளிக்கக்கூடியவை. இத்தகைய சிறப்பு நிறைந்த இயேசுவின் இறுதி வார்த்தைகள் குறித்த தனது கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்முனைவர் ரமேஷ்.

வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள் முனைவர் ரமேஷ் அந்தோணி அவர்கள்  தமது தத்துவயியலை சென்னை பூவிருந்தவல்லி குருத்துவ கல்லூரியிலும் இறையியலை திருச்சி பவுல் குருத்துவ கல்லூரியிலும் பயின்றார். கிறிஸ்துவ கல்வியியலில் முதுகலைப்பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் வேலூர் மறைமாவட்ட குருத்துவப் பயிற்சி மையத்தின் துணை அதிபராகவும், ஆம்பூர், கன்னியம்பாடி ஆகிய பங்குகளின் பங்கு தந்தையாகவும், வேலூர் நல்லாயன் மேய்ப்பு பணி நிலையத்தின் இயக்குனராகவும், மறை மாவட்ட வேந்தராகவும் பணியாற்றியவர். மேலும் இவர் ஜெர்மனிய பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். குறிப்பாக அன்பியங்களின் பன்முகத்தன்மையைப் பற்றிய இவருடைய  ஆய்வுக் கட்டுரைப் பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்பொழுது இவர் திருச்சி தூய பவுல் குருத்துவக் கல்லூரியில் மேய்ப்புப்பணி இறையல் பேராசிரியராகவும் அருள்பணித்துவ மாணவர்களின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். தந்தை அவர்களை இயேசுவின் இறுதி ஏழு வார்த்தைகள் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2024, 10:46