நேர்காணல் – மரியின் ஊழியர் சபையைத் தோற்றுவித்த ஏழு புனிதர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுளை மறந்து உலக வாழ்க்கை இன்பங்களிலும், மனம் போன வாழ்விலும் நாட்டம் கொண்டிருந்த மக்கள் மத்தியில் இறைவன் பால் அதிக பக்தி கொண்டிருந்தவர்கள் மரியின் ஊழியர் சபையைத் தோற்றுவித்த ஏழு புனிதர்கள். அழிந்துபோகும் இன்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த மக்கள் மத்தியில் இவர்கள் எழுவரின் ஈடுபாடு இறைவன் மட்டில் இருந்தது. அதிலும் குறிப்பாக அன்னை மரியாள் மீது மிக அதிகமான பக்தி கொண்டிருந்தனர். புனித பொன்பீலியூஸ், புனித அலேக்சிஸ், புனித அமதெயுஸ், புனித ஹ,க் புனித சொஸ்தெணுஸ், புனித மனெதுஸ், புனித போனகுந்தா என்ற இந்த ஏழு புனிதர்களே புனித மரியின் ஊழியர் சபையைத் தோற்றுவித்த ஏழு புனிதர்களாவர். பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் சனிக்கிழமை சிறப்பிக்கப்பட உள்ள இந்த 7 புனிதர்கள் பற்றிய செய்திகளை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை சுரேஷ் மைக்கேல். மரியின் ஊழியர் சபை அருள்தந்தையான சுரேஷ் மைக்கேல் அவர்கள், தற்போது இத்தாலியின் பதுவாவில் உள்ள ஒரு பங்குத்தளத்தில் உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். கணிதத்தில் முதுகலைக்கல்வி, கல்வியியல்கல்வி, மேல்நிலைக்கல்வியையும் முடித்துள்ள தந்தை அவர்களை ஏழு புனிதர்கள் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்