நேர்காணல் - அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் உலக நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையின் இதயமாக விளங்கும் அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளுக்கான உலக நாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். அழைத்தல் என்னும் கடவுளின் அற்புதமான பரிசிற்காக அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் அனைவரும் நன்றி தெரிவிக்கும் இந்த நாளில், கடவுளை மிகவும் உறுதியாக ஆராதித்து அவரின் அழைத்தல் என்னும் உயரிய கொடைக்காக நன்றி தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் புனித இரண்டாம் ஜான் பால். கடினமான சூழல்கள் மத்தியிலும் துறவியரின் வாழ்வு கிறிஸ்துவிற்கு சான்று பகரக்கூடியதாய் அமைய வேண்டும் என்ற கருத்திற்கு இணங்க நற்செய்திகாக பல்வேறு இன்னல்களை துறவறத்தார் அனுபவித்து வருகின்றனர். இத்தகைய அர்ப்பணிக்கப்பட்ட உலக துறவிகள் நாள் குறித்த தனது செய்திகளை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி ஆக்னல் அமலன் CRS.
சோமாஸ்கன் சபை அருள்தந்தையான ஆக்னல் அமலன் அவர்கள், அவரது சபையின் இந்திய மறைமாநிலத்தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகும் போர்காலத்தின்போதும் ஏறக்குறைய 6 ஆண்டுகள் இலங்கையில் சமூகப்பணிகளை மிகத்திறமையாக ஆற்றியவர். உருவாக்கும் பணியின் பல்வேறு நிலைகளில் முனைப்புடன் செயல்பட்டு பல்வேறு இளம் உள்ளங்களை உருவாக்கியவர். பெங்களூர் தூய ஜெரோம் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய அருள்தந்தை ஆக்னல் அமலன் அவர்கள், உரோம் தூய கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் கோட்பாட்டு இறையியலில் முதுகலைக்கல்வி பயின்றவர். தந்தை அவர்களை அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளுக்கான உலக நாள் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்