மோதலில் இறைந்தவர்களைக் கண்டு வேதனையுறும் அவர்தம் உறவினர்கள் மோதலில் இறைந்தவர்களைக் கண்டு வேதனையுறும் அவர்தம் உறவினர்கள்   (AFP or licensors)

காசாவில் போர்நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா தீர்மானம்!

இரஃபாவில் தாக்குதல் நடத்துவதற்கான இஸ்ரேலின் திட்டங்கள் அனைத்துலகளவில் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளன. மேலும் பல நாடுகள் அந்நாட்டின்மீதான கட்டுப்பாட்டை வலியுறுத்தியுள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் மோதல் தீவிரமடைந்துள்ள வேளை, அங்குத் தற்காலிக போர்நிறுத்தம் கோரி ஐ.நா-வின் பாதுகாப்பு அவையில் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில், மோதல் தொடர்பான ஐ.நா-வின் வாக்கெடுப்பின்போது ‘போர் நிறுத்தம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தவிர்த்து வந்த வேளை, காசாவில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது இதுவே முதல் முறை என்றும் அச்செய்திகள் கூறுகின்றன.

மேலும் இந்த வார இறுதியில் அமெரிக்க வரைவு தீர்மானம் பற்றிய பேச்சுக்கள் தொடங்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கும் அதேவேளை, முன்மொழிவு வாக்கெடுப்புக்கு விடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19, இத்திங்களன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 உறுப்பு நாடுகள் காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் இடைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன என்று கூறும் அச்செய்திக் குறிப்பு, இவ்வழைப்பு காசா பகுதியில் நிலையான போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Brussels-இல் நிகழ்ந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில், ஹங்கேரியைத் தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ரஃபா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்தன என்றும், மேலும் இது அந்நகரத்தில் புலம்பெயர்ந்தோரின் துயரத்தை இன்னும் அதிகரிக்கும் என்றும் இந்நாடுகளைச் சேர்ந்த அனைவரும் கருத்துத் தெரிவித்தனர் என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2024, 14:39