தேடுதல்

தங்களின் உரிமைகளை வலியுறுதிப் போராடும் கென்ய மக்கள் தங்களின் உரிமைகளை வலியுறுதிப் போராடும் கென்ய மக்கள்  

மனித குலத்திற்கு சேவையாற்றாத நாம் இங்கிருந்து என்ன பயன்?

எடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும், அமல்படுத்தப்படும் செயல்பாடுகளும் அனைத்து மக்களையும் பாதிக்கின்றன, ஏனெனில் அனைத்து நெருக்கடிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பிப்ரவரி 20-ஆம் தேதி, அதாவது, இச்செவ்வாய்க்கிழமையன்று உலகில் சிறப்பிக்கப்படும் உலக சமூக நீதி தினத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள CIDSE என்னும் வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாட்டிற்கான திருஅவையின் அனைத்துலக ஒத்துழைப்பு நிறுவனத்தின் பொதுச்செயலர், எடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும், அமல்படுத்தப்படும் செயல்பாடுகளும் அனைத்து மக்களையும் பாதிக்கின்றன, ஏனெனில் அனைத்து நெருக்கடிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனத் தெரிவித்துள்ளார்.

மனித குலத்திற்கு சேவையாற்றவில்லையெனில் நாம் இங்கிருந்து என்ன பயன் என்ற தலைப்புடன் சிறப்பிக்கப்படும் இந்த உலக சமூக நீதி தினம் அனைவருக்கும் சரிநிகர் தன்மையையும் மாண்பையும் உறுதிச் செய்வதுடன், மக்கள் பாதுகாப்புடன் வாழவும் வளரவும் தேவையான சுற்றுச்சூழலை உருவாக்கவும் உதவுகிறது.

சமூக நீதிக்கான கத்தோலிக்க நிறுவனமான CIDSE-இன் பொதுச் செயலர் Josaine Gauthier உரைக்கையில், இன்று நாம் சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனத் தெரிவித்தார்.

காலநிலை இடையூறுகள், கொடிய வறுமை நிலை, வன்முறை, போர், வளங்கள் மீதான மோதல்கள், ஆண்-பெண் சமத்துவமின்மை, சமூக மற்றும் இனவெறி அடிப்படையிலான சரிநிகரற்ற தன்மை போன்றவை உருவாவதற்குக் காரணமே, அதிகாரப் பகிர்வின்மை, வீணடிக்கும் கலாச்சாரம் போன்றவைகளுடன், மனிதர்களுக்கும் ஏனைய படைப்புக்களுக்கும் இடையேயான உறவில் உருவாகும் நெருக்கடிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதேயாகும் என கூறினார் Gauthier.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2024, 13:40