இயேசுவிடம் குணம் வேண்டி மன்றாடுதல் இயேசுவிடம் குணம் வேண்டி மன்றாடுதல் 

தடம் தந்த தகைமை – அருஞ்செயல்களைக் கண்டாலன்றி....

நன்மனமும் நம்பிக்கையும் ஒன்றித்தால் அருஞ்செயல்கள் நம்மாலும் சாத்தியமே. நம்பிக்கை ஏழைகளை உயிர் வாழச் செய்கிறது. பயம் பணக்காரர்களைக் கொல்கிறது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

கலிலேயாவின் கானா ஊரில் கல்யாண வீட்டில் நிகழ்வுற்ற இரசக்கதை இங்குமங்குமாகப் பேசப்பட்டு வந்தது. அதை முடித்து யூதேயா சென்ற இயேசு மீண்டும் கலிலேயா வந்த செய்தி அரச அலுவலரின் காதுகளை எட்டியது. திருமண வீட்டாரின் மானம் காத்த மகானுக்கு தன் மகனுக்கு உயிர் தானமாக்கும் வல்லமை இருக்குமென நம்பினார். தன் பணிநிலை, அதிலுள்ள செல்வாக்கு எதுவும் அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. மகன் உயிருக்காக வந்து மன்றாடத் துணிந்தார். பணிவானவர்களால்தான் துணிவானவற்றைச் செய்ய முடியும்.

கானா திருமணம்வரை கண்டுகொள்ளப்படாத இயேசு இப்போது எல்லாராலும் பேசப்படும் மனிதரானார். அவருக்குள் யாரோ ஒருவர் இருக்கின்றார், அல்லது அவருக்குள் ஒரு சக்தி உள்ளதெனக் கிசுகிசுத்தனர். அந்த சக்தி அரச அலுவலர் மகனைச் சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் அங்கே விரவிக் கிடந்தது. இன்றும் அருஞ்செயல்களுக்காக அலைமோதும் கூட்டம் எங்கும் பரவலாய் உள்ளது. நன்மனமும் நம்பிக்கையும் ஒன்றித்தால் அருஞ்செயல்கள் நம்மாலும் சாத்தியமே.

நம்பிக்கை ஏழைகளை உயிர் வாழச் செய்கிறது. பயம் பணக்காரர்களைக் கொல்கிறது.

இறைவா! உலகமே உம் அருஞ்செயல். அதில் நான் ஓர் அனுபவிப்பாளர். என் வாழ்வை அருஞ்செயலாக்க அருள் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2024, 13:06