தடம் தந்த தகைமை – இறந்த பிள்ளைக்காக வேண்டிய சூனேமியப் பெண்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சூனேமியப் பெண் எலிசா இறைவாக்கினரிடம், “ஐயா! உம்மிடம் நான் மகப்பேறு கேட்டதுண்டா? ‘என்னை ஏமாற்ற வேண்டாம்’ என்று உமக்கு நான் முன்பே சொல்லவில்லையா?” என்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, “நீ இடுப்பை வரிந்து கட்டிக் கொண்டு, எனது ஊன்று கோலை உன் கையில் எடுத்துக் கொண்டு போ. வழியில் யாரையாவது கண்டால் வணக்கம் செய்யாதே. உனக்கு யாராவது வணக்கம் செய்தாலும் பதில் வணக்கம் செய்யாதே. என் ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வை” என்றார். ஆனால், பிள்ளையின் தாய் “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர்மேலும் ஆணை! உம்மை நான் விடமாட்டேன்” என்றார். எனவே, எலிசா எழுந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார். கேகசி இவர்களுக்கு முன்பே புறப்பட்டுச் சென்று, ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான். ஆயினும், பிள்ளைக்குப் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. எனவே, அவன் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, “பிள்ளை கண் திறக்கவில்லை” என்று அறிவித்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்