தடம் தந்த தகைமை – எலிசாவை சந்திக்கச் சென்ற சூனேமியப் பெண்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சூனேமியப் பெண், கடவுளுடைய அடியவரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினார். பின்னர், கதவைத் பூட்டிவிட்டு வெளியே வந்தார். தம் கணவனை அழைத்து அவரிடம், “வேலைக்காரன் ஒருவனை ஒரு கழுதையுடன் என்னோடு அனுப்பி வைக்கவும். கடவுளின் அடியவரிடம் நான் உடனே போக வேண்டும். விரைவில் திரும்பி வருகிறேன்” என்றார். அதற்கு அவருடைய கணவர், “நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை; ஓய்வு நாளும் இல்லையே!” என்றார். அதற்கு அப்பெண், “நல்லதற்குத் தான்” என்றார். கழுதைக்குச் சேணமிடச் செய்தபின், அவர் தம் வேலையாளை நோக்கி, “கழுதையை வேகமாக ஓட்டிச் செல். நான் சொன்னால் ஒழிய, அதன் வேகத்தைக் குறைக்காதே!” என்றார்.
அவ்வாறே, அவர் புறப்பட்டு, கர்மேல் மலையிலிருந்து அடியவரிடம் வந்து சேர்ந்தார். அவர் தம்மை நோக்கி வருவதைத் தொலையிலிருந்து பார்த்த எலிசா தம் வேலையாள் கேகசியை நோக்கி, “இதோ! சூனேம் பெண் வருகிறாள். அவளைச் சந்திக்க உடனே விரைந்து செல். அவளிடம், ‘நீ நலமா? உன் கணவர் நலமா? உன் குழந்தை நலமா?’ என்று கேள்” என்றார். அப்பெண் மறுமொழியாக, “ஆம், நலமே” என்றார், பிறகு அவர் மலையில் இருந்த கடவுளின் அடியவரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அவரை அப்புறப்படுத்த கேகசி அருகில் வந்தபோது, கடவுளின் அடியவர், “அவளை விட்டுவிடு, ஏனெனில் ,அவளது உள்ளம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ஆண்டவர் அதை எனக்கு அறிவிக்காமல் மறைத்து விட்டார்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்