தேடுதல்

காசாவில் குண்டுமழை காசாவில் குண்டுமழை   (AFP or licensors)

காசாவில் போர்நிறுத்தம் ஒன்றே நிரந்தரத் தீர்வு!

காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அந்தப் பகுதி மிகவும் அவசியமான உதவிகளைப் பெறுவதற்கும் ஒரே வழி நிரந்தரமான போர் நிறுத்தம்தான் Larbie

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, CAFOD, இஸ்லாமிய நிவாரணம், பாலஸ்தீனத்திற்கான பெற்றோர்கள், பசிக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பூமியின் நண்பர்கள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களின் ஆதரவாளர்கள் யாவரும் இந்த வாரம் இலண்டன் சென்று மத்திய கிழக்கின் நெருக்கடி குறித்து எம்.பி.க்களை வலியுறுத்த உள்ளதாக ICN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அரசியல்வாதிகள் தங்கள் தொகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து, காசாவில் நிகழ்ந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவசியமான தேவைகளைக் குறித்து விவாதிக்க இத்தகையதொரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

மார்ச் 14, வியாழனன்று, மதியம் 4 மணி முதல், வெஸ்ட்மின்ஸ்டருக்கு அருகிலுள்ள தேம்ஸ் அரங்கில் Hampshire-ரில் உள்ள மியோன் பள்ளத்தாக்கிற்கான எம்.பி., Flick Drummond ஆதரவுடன், Oxfam GB என்ற அமைப்பின் தலைமையிலான ஒரு முயற்சியில் நூறு பரப்புரையாளர்கள் கூடிவருகின்றனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி  தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலில் இன்றுவரை ஏறக்குறைய 30,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஏறத்தாழ 20, இலட்சம் பேர்  தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சென்று காசாவில் பட்டினியை எதிர்கொண்டு வருகின்றனர்.  

கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பின் பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் பரப்புரைகளின் தலைவரான Jennifer Larbie அவர்கள்,  காசாவில் ஐக்கிய நாடுகள் தலைமையிலான மனிதாபிமான உதவிகளுக்குப் பிரித்தானிய அரசு முழுமையாக நிதியளிக்க வேண்டும் என்று அவ்வமைப்பு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அந்தப் பகுதிக்கு மிகவும் அவசியமான உதவிகளைப் பெறுவதற்கும் ஒரே வழி நிரந்தரமான போர் நிறுத்தம்தான் என்று சுட்டிக்காட்டியுள்ள Larbie அவர்கள், காசாவில் இந்தப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து அரசு குரல்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2024, 15:08