நேர்காணல் – ஆற்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பெண்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்பினால் பன்மொழிகள் பேசும் திறம் படைத்தவர் பெண்.
ஆயிரம் கவிதைகள் பூவாகவும் புவியாகவும் வர்ணித்து எழுதப்படுவர் பெண்.
இன்னல்கள் பல இடையறாது வந்தாலும் இன்முகத்தோடு ஏற்பவர் பெண்.
ஈடில்லா வாழ்க்கை வாழ உத்வேகத்தோடு உழைப்பவர் பெண்.
இல்லறப்பணி முதல் இயந்திரங்களை இயக்கும் பணி வரைப் பெண்கள் எல்லாத்துறைகளிலும் ஏற்றம் கண்டு வருகின்றனர்.
அகில உலக பெண்கள் தினமாகிய இன்று பெண்ணின் ஆற்றல் பற்றிய கருத்துக்களை இன்று நம்முடம் பகிர்ந்து கொள்பவர் அருள்சகோதரி பெனில் அருள் வேதமாணிக்கம். இறை ஊழியர் பிரான்சிஸ் ஸ்க்ரூட் அவர்களால் பெண்களின் ஆற்றலுக்காக உருவாக்கப்பட்ட தூய பாத்திமா அன்னை சபை அருள்சகோதரியான பெனில் அவர்கள், தத்துவஇயல் மற்றும் இறை இயலில் பட்டம் பெற்றவர். தற்போது உரோமில் உள்ள கிரகோரியன் திருப்பீடப்பல்கலைக் கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் படிப்பினைப் பயின்று வருகின்றார். அருள்சகோதரி பெனில் அவர்களை அகில உலக பெண்கள் தினம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
உலகின் பல்வேறு ஏளனப் பேச்சுகளுக்கு இடையில் தன்னம்பிக்கையோடு சிறகடித்து தன் கனவை நனவாக்கிக் கொண்டிருப்பவள் பெண். ஆண்களை விட மிகுந்த ஆற்றலும் தன்னம்பிக்கையும் உத்வேகமும் உடல் சோர்வடையாத உற்சாகமும் ஒருங்கே கொண்டவள் பெண். போற்றுதலுக்குரிய பெண்மை வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் கூறிடுவோம். போராட்டங்கள் பலவற்றை தங்களது வாழ்வில் சந்தித்து சிறப்புடன் வாழும் பெண்கள் அனைவருக்கும் அகில உலக பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்