தேடுதல்

பேராயர் Michael Najeeb தனது விசுவாசிகளுடன் பேராயர் Michael Najeeb தனது விசுவாசிகளுடன்   (AFP or licensors)

தொடர்ந்து அச்சத்தின் பிடியில் வாழும் இராக் கிறிஸ்தவர்கள்!

ஏறத்தாழ 4 கோடி மக்கள் வசிக்கும் ஈராக் நாட்டில், 2003-ஆம் ஆண்டில் 14 இலட்சமாக இருந்த கிறிஸ்தவ மக்கள் தொகை இன்று ஏறக்குறைய 2,50,000-ஆக, குறைந்து விட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ள வேளை, அங்குக் கிறிஸ்தவர்களுக்கு சில சிரமங்கள் இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் அந்நாட்டில் அதற்கான பயன்கள் மெதுவாக வெளிப்படுகின்றன என்று கூறியுள்ளார் Mosul மற்றும் Aqra-விற்கான கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Michael Najeeb

மார்ச் 5, 2021 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கிற்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தைத் மேற்கொண்டு மூன்று ஆண்டுகள் நிறைவுறும்வேளை, அந்நாட்டில் நிலவும் சூழல் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் பேராயர்  Najeeb.

2017-இல் ISIS இராணுவத் தோல்வியைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த ஈராக்கிய கிறிஸ்தவர்களை மீள்குடியேறுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆறுதல் அளித்து ஊக்குவித்த போதிலும், பலர் இன்னும் தயங்குகிறார்கள் என்றும், மேலும் பல குடும்பங்கள் நினிவே சமவெளி மற்றும் ஈராக்கிய குர்திஸ்தானில் இருந்து தொடர்ந்து புலம்பெயர்ந்து வருகின்றனர் என்றும் உரைத்துள்ளார் பேராயர் Najeeb. 

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு இன்னும் பாதுகாப்பற்ற மற்றும் அரசால் கட்டுப்படுத்த முடியாத இடத்தில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க விரும்பவில்லை என்ற எதார்த்தமான சூழலையும் இநேர்காணலில் விளக்கியுள்ளார் பேராயர்  Najeeb

மார்ச் 5, 2021 அன்று, ஈராக்கிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, தனது நான்கு நாள் பயணத்தின்போது பாக்தாத், ஆபிரகாமின் பிறப்பிடமான ஊர் சமவெளி மற்றும் நஜாஃப், நசிரியா, எர்பில், மொசூல் மற்றும் கராகோஷ் ஆகிய நகரங்களுக்குச் சென்றதுடன், அங்கு அவர் கிறிஸ்தவச் சமூகங்கள் மற்றும் அரசியல் மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2024, 14:47