ஹெய்ட்டி தலத்திருஅவை எப்போதும் அதன் மக்களுடன் பயணிக்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஹெய்ட்டி நாட்டின் பிரதமர் Ariel Henry தனது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ள வேளை, இந்நாட்டைப் பற்றிக் கொண்ட கும்பல் வன்முறைக்கு எதிராகக் கத்தோலிக்கத் திருஅவைத் தொடர்ந்து நம்பிக்கையின் அரணாகச் செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதற்கான தனது விருப்பத்தை அவர் அறிவித்ததன் காரணமாக, அவர் தனது பதவிவிலகல் குறித்து அறிவித்துள்ள வேளை, இவ்வாறு கூறியுள்ளதுடன், நாட்டில் புதிய அரசு அமையும் வரை தனது தலைமையிலான அரசு நாட்டைத் தொடர்ந்து நிர்வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் Henry.
இச்சூழலில், ஹெய்ட்டி நாட்டில் வன்முறை மற்றும் பல சமூகப் பிரச்சினைகளுக்கு மத்தியில், தலத்திருஅவை பலருக்கு வலிமை மற்றும் பயனுள்ள உதவிகரமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் அருள்பணியாளர் Massimo Miraglio
நாட்டின் தற்போதைய சூழல் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள Jérémie-விலுள்ள புனித சகாய அன்னைப் பங்குத்தளத்தின் பங்குத்தந்தை Miraglio அவர்கள், தலத்திருஅவை எப்போதும் ஹெய்ட்டி மக்களின் வலிமைவாய்ந்த அரணாகச் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதிய மற்றும் வேறுபட்ட ஹெய்ட்டியை உருவாக்குவதில் தலத்திருஅவைக்கு செல்வாக்குமிக்க பங்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அருள்பணியாளர் Miraglio அவர்கள், ஹெய்ட்டியை எப்படி மீண்டும் கட்டியெழுப்புவது என்பது குறித்தும், புதியதொரு ஹெய்ட்டியைப் பற்றியும் இப்போது சிந்திக்கத் தொடங்குவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்