தடம் தந்த தகைமை – அடியாரின் கோடரியை மீட்ட எலிசா
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒரு நாள் இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை நோக்கி, “உம்மோடு நாங்கள் வாழும் இந்த இடம் மிகக் குறுகியதாய் உள்ளது. எனவே, நாங்கள் யோர்தானுக்குச் சென்று ஆளுக்கொரு உத்திரம் கொண்டு வந்து வீடொன்று கட்டி அதில் குடிபுகுவோம்” என்றனர். அதற்கு அவர், “போய், வாருங்கள்” என்றார். அவர்களில் ஒருவன், “நீரும் உம் அடியாராகிய எம்மோடு வாரும்” என்று அழைத்தான். “நானும் வருகிறேன்” என்று அவர் கூறினார். எனவே, அவரும் அவர்களுடன் யோர்தானுக்குச் சென்றார். அவர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர்.
அவ்வாறு ஒருவன் உத்திரம் வெட்டிக்கொண்டிருந்தபோது அவனது கோடரி கழன்று தண்ணீரில் விழுந்தது. உடனே அவன் “ஐயோ! என் தலைவரே, இது இரவல் பொருளாயிற்றே!” என்று கத்தினான். அப்போது கடவுளின் அடியவர், “அது எங்கு வீழ்ந்தது” என்று கேட்டார். அவனும் அந்த இடத்தைக் காட்டினான். உடனே எலிசா ஒரு கம்பை வெட்டி அங்கு எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கியது. அவர் “அதை எடுத்துக் கொள்” என்று அவனிடம் கூற, அவனும் கை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்