தேடுதல்

வழி காட்டும் ஒளி வழி காட்டும் ஒளி  (ANSA)

தடம் தந்த தகைமை - உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க

உலகின் ஒளி நானே என மொழிந்த இயேசுவின் வழித்தோன்றல்கள் நாம். அவரது வாழ்வு பரிவாய், பாசமாய், பணியாய், பகிர்வாய், பணிவிடையாய், பலியாய் ஒளிர்ந்தது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத்தேயு 5:16) என்கிறார் இயேசு.

உலகின் ஒளி நானே (யோவா 8:12) என மொழிந்த இயேசுவின் வழித்தோன்றல்கள் நாம். அவரது வாழ்வு பரிவாய், பாசமாய், பணியாய், பகிர்வாய், பணிவிடையாய், பலியாய் ஒளிர்ந்தது. அந்த இயேசுவைப் பின்தொடரும் நம் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் ஒளியின் பரிணாமமாக வேண்டும். நம்மைச் சூழ வாழ்வோர் நம் ஒளிக் கதிர்களான நற்செயல்களைக் கண்டு பேரொளியாம் இறையைப் போற்ற வேண்டும்.

காடு வழியே பயணித்த தந்தையும் மகனும் முன்னும் பின்னுமாகச் செல்ல மாலை மங்கலில் தூர இடைவெளியால் ஒருவர் ஒருவரைப் பிரிய நேரிட்டது. துவறிய மகனைக் கண்டுபிடிக்கக் குரல் எழுப்பினால் காட்டு விலங்குகள் கடித்துக் குதறிவிடும். தன் கையிலிருந்த தீப்பெட்டியால் பந்தம் ஏற்றி அசைத்திட, தந்தை நின்ற இடத்தை மகன் கண்டுகொண்டான்.

தவறான வழிவிடுத்து, சரியான பாதைக்கு ஒளி வழிகாட்டும். சரியான வழி கடினமாக இருந்தாலும், தனித்த பயணமென்றாலும் எதிர்நீச்சலிட்டுப் பயணிப்பதே ஒளி வாழ்வு. ஆதவனின் ஒளி ஒவ்வொரு நாளும் புதியது. நாமும் ஒவ்வொரு நாளும் புதியவர்கள்.

இறைவா! ஒளியாய் ஒளிரவே நான் பெற்ற வாழ்க்கை. அதில் ஒளியாமல் ஒளிர வழியாயிரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2024, 13:23