தடம் தந்த தகைமை – தொழுநோயால் தாக்கப்பட்ட கேகசி
மெரினா ராஜ் - வத்திக்கான்
கேகசி தான் தங்கி இருந்த மலையை வந்தடைந்ததும் பணியாளர்களிடமிருந்து பொருள்களைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். பின்னர், அவர்களை திருப்பி அனுப்பி வைக்க, அவர்களும் திரும்பிச் சென்றனர். அவன் தன் தலைவராகிய எலிசாவிடம் வந்து அவர்முன் நின்றான். எலிசா அவனை நோக்கி, “கேகசி! நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அவன், “அடியேன் எங்கும் செல்லவில்லை” என்றான். அதற்கு அவர், “அந்த ஆள் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்ததை நான் ஞானத்தால் அறிந்தேன். வெள்ளி, ஆடைகள், ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் — இவைகளைப் பெற்றுக் கொள்ள இதுவா சமயம்? எனவே, நாமானின் தொழுநோய் உன்னையும் உன் வழிவந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்!” என்றார். அவ்வாறே, அவனுக்குத் தொழுநோய் பிடிக்க, அவன் உடம்பெல்லாம் வெண்பனி போலாயிற்று. அவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்