தேடுதல்

போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் பட்டினியால் வாடும் முதியவர் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் பட்டினியால் வாடும் முதியவர்   (AFP or licensors)

சூடானில் நிலவும் பஞ்சத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!

சூடானின் உள்நாட்டுப் போரால் 2 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையான பஞ்சம காரணமாகத் தங்கள் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்திசெய்ய இயலாமல் துயருறுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடான் மற்றும் அதன் அண்டை நாடுகளில் பணிபுரியும் மனிதாபிமான அமைப்புகள், சூடான் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அங்கே இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை உடனடியாக அதிகரிக்குமாறு அனைத்து செயற்பாட்டாளர்களையும்  வலியுறுத்தியுள்ளன.

பசி என்பது அண்மைய வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகவும், உலகத்தைத் தூண்டக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்டதாகவும் இருக்கும் என்று ஐ.நா கருதுவதைத் தீர்க்க உதவும் வகையில், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி பாரிஸில் மனிதாபிமான மாநாட்டை நடத்துவதற்கு முன்னதாக இந்த வேண்டுகோள் அவ்வமைப்புகளால் விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9, இச்செவ்வாயன்று, கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவிற்கான IAWG எனப்படும் நிறுவனங்களுக்கிடையேயான பணிக்குழு மற்றும் சூடானின் INGO எனப்படும் குழு இரண்டும் நடத்திய மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில், ஆப்பிரிக்க நாடு இதுவரை அனுபவித்திராத மிக மோசமான பசி நெருக்கடியை எதிர்கொள்வதை உறுதிசெய்துள்ள நிபுணர்கள், இம்மாநாட்டின் பங்கேற்பாளர்கள் உறுதியானதொரு முடிவை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

சூடான் அரசுப்படைக்கும் புரட்சிப்படைக்கும் இடையே  கடந்த ஓராண்டாக நடந்துவரும் மோதல் காரணமாக 85 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர், 15 இலட்சம் மக்கள் அண்டை நாடுகளில் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் சூடானில் 2 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடும்பஞ்சம் காரணமாகத் தங்கள் அடிப்படை உணவு தேவைகளை பூர்த்திசெய்ய இயலாமல் துயருறுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2024, 12:37