தடம் தந்த தகைமை – நகருக்குள் நுழைந்த தொழுநோயாளர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளிகள் இருந்தனர். இவர்கள் ஒருவர் ஒருவரிடம், “சாவை எதிர்நோக்கி, நாம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும்? நாம் நகருக்குள் செல்வோமாயின், நகரில் பஞ்சம் இருப்பதால், நாம் செத்துப் போவோம். இங்கேயே தங்கி இருந்தாலும் சாக வேண்டியதுதான். வாருங்கள்! சிரியாவின் பாசறைக்குச் சென்று தஞ்சம் புகுவோம். அவர்கள் நம்மை வாழவிட்டால், நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால் செத்துப்போவோம்” என்று பேசிக் கொண்டனர்.
இருள் கவிழ்ந்த வேளையில் அவர்கள் சிரியரின் பாசறையின் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒருவரும் இல்லை. ஏனெனில், தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி ‘தலைவர்’ செய்திருந்தார். எனவே, அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்திய அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான்” என்று சொல்லிக்கொண்டனர். எனவே, அவர்கள் இருள் கவிழ்ந்த வேளையில் ஓட்டம்பிடித்தனர். தங்கள் கூடாரங்களையும், கழுதைகளையும், பாசறையையும் அப்படியே விட்டுவிட்டு உயிருக்காகத் தப்பி ஓடினர். ஆகவே, இந்தத் தொழுநோயாளிகள் பாசறையின் எல்லையை நெருங்கி, ஒரு கூடாரத்தின் உள்ளே நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும், அங்கிருந்த வெள்ளி, பொன், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் திரும்பி வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து அங்கிருந்தவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்