தேடுதல்

இயேசுவின் கனிவான பார்வை இயேசுவின் கனிவான பார்வை 

தடம் தந்த தகைமை – கடைசியானோர் முதன்மையாவர்

2000 ஆண்டுகளாக இயேசுவின் பார்வையை இந்த உலகம் படித்தது, விளக்கியது, விவாதித்தது, வழிபாடுகள் பல நடத்தியது. ஆனால் கடையரை முன்னிலைப்படுத்தும் கருத்தியல் இன்னமும் கடைக்கோடியில்தானே உளது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர் என்றார் இயேசு.

உலகப் பார்வையில் : வசதி படைத்தோர், உயர் கல்வி பெற்றோர், அலங்கார ஆடை தரித்தோர், சாதி-சமய-அரசியல் செல்வாக்கு பெற்றோர், பெரும் பதவி வகிப்போர் போன்றோரெல்லாம் முதன்மையானவர்கள்.

இயேசு பார்வையில்: ஏழையர், மாற்றுத் திறனாளர்கள், குழந்தைகள், பெண்கள் நலம் நாடுவோர், பல நிலைகளில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டோர் என்போரெல்லாம் முதன்மையானவர்கள். உலகம் யார் யாரைக் கடையராகக் கருதியதோ அவர்களே இயேசுவுக்கு முதன்மை மனிதர்கள்.

2000 ஆண்டுகளாக இயேசுவின் இப்பார்வையை இந்த உலகம் படித்தது, விளக்கியது, விவாதித்தது, வழிபாடுகள் பல நடத்தியது. ஆனால் கடையரை முன்னிலைப்படுத்தும் கருத்தியல் இன்னமும் கடைக்கோடியில்தானே உளது. நம் திருஅவையிலும், சமூகங்களிலும் இயேசுவின் பார்வையில் கடைசியானோரை முதன்மைப்படுத்தாதவரைக்கும் இயேசுவும் கடையராக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மை. இந்நிலை மாறும் நாள் எந்நாளோ!

பெரிய ஆறு சிறிய ஓடைகளை ஒதுக்குவதில்லை.

இறைவா! கடையரோடு கைகோர்த்து வாழும் உம்மோடு நானும் ஒன்றித்து வாழும் சம மனநிலை தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2024, 16:16