தேடுதல்

அன்பால் அரவணைக்கக் காத்திருக்கும் இயேசு அன்பால் அரவணைக்கக் காத்திருக்கும் இயேசு 

தடம் தந்த தகைமை – விண்ணரசில் பெரியவர்

அன்பு விழிகளால் பார்க்கவும் வாழவும் புதிய இருவேறு சட்டங்களை வகுத்துக் கொடுத்தார் இயேசு. அது இறையன்பு, பிறரன்பு சார்ந்தது. அவற்றில் நிலைப்பவரே விண்ணகத்தில் உயர்ந்தவர்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார், என்றார் இயேசு.

சட்டங்களின்படி நகர்தலே கடவுளுக்கு ஏற்ற வாழ்வு, என்ற நெறிமுறையை யூத சமயத்தின் ஆளும் வர்க்கம் அடித்தட்டு மக்களுக்குப் போதித்தது. மோசே கொடுத்த பத்துக் கட்டளைகளை இரு கூறுகளாக்கி முதற்பகுதி பெரிய சட்டங்கள் என்றும் இரண்டாம் பகுதி சிறிய சட்டங்கள் என்றும் தங்களுக்குச் சாதகமாக்கிச் சாதித்தது. இதனைக் கற்பித்ததோடுமன்றி இரண்டாம் பகுதிக்குத் தாங்கள் கட்டுப்பட்டவர்களல்ல என்ற மமதையும் கொண்டிருந்தது.

ஆனால் இயேசு, எவற்றை அவர்கள் சிறிதெனக் கருதினார்களோ அவற்றை முக்கியத்துவப்படுத்தினார். ஏனெனில் அவை அக, புற ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்தவை. அவற்றில் ஒழுகுவதே இறைவிருப்பம் என எடுத்துச் சொன்னதோடு அவற்றை அன்பு விழிகளால் பார்க்கவும் வாழவும் புதிய இருவேறு சட்டங்களை வகுத்துக் கொடுத்தார். அது இறையன்பு, பிறரன்பு சார்ந்தது. அவற்றில் நிலைப்பவரே விண்ணகத்தில் உயர்ந்தவர் என உளமாரச் சொன்னார்.

அன்பற்ற ஒருவர் எவ்வளவுதான் சட்ட வழியில் சென்றாலும் அவர் சந்திப்பது சிக்கல்தான்.

இறைவா! எதையும் என் போதனையால் அல்ல, வாழ்வால் போதிக்கப் போதுமான வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2024, 08:24