தடம் தந்த தகைமை - அம்மா, உமது நம்பிக்கை பெரிது
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
“அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று கானானியப் பெண்ணிடம் கூறினார் இயேசு (மத் 15:28).
காற்றைவிடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் என்பார் ஷேக்ஸ்பியர். கானானியப் பெண்ணின் எண்ணமும் இயேசுவின் எதிர்ப்பின் எண்ணமும் ஒரு பெரும் வார்த்தைப் போர்தனை நிகழ்த்தின. ஏழைகள் வயிற்றுப் பசி எனும் வலி கொண்டிருந்தாலும் மனதில் வலிமை கொண்டிருப்பர். அவ்வாறே நாம் பார்க்கும் இந்தக் கானானியப் பெண்ணும் தன் மகள் மீதான அன்பு, இயேசுவின் மீதான நம்பிக்கை இரண்டும் இணைந்து ஓர் அருஞ்செயல் நடக்கப் பாதை வகுத்தார். இயேசு ஒரு பிடிவாதக்காரரல்லர். தேவைகளில் உழல்வோரின் தேடல்களை நிறைவு செய்ய எத்தகு எல்லைகளையும் தாண்டும் தயவுள்ளம் கொண்டவர். தான் உதறினாலும் உறுதியாக உதவி பெற வேண்டுமென்று நின்ற கானானியப் பெண்ணை ஒரு வீரமங்கையாகவே
பார்த்தார். தான் முதலில் கண்டு கொள்ளாத அப்பெண்ணைத் தன் கண்களில் ஈரம் கொப்பளிக்க 'அம்மா' என்றழைத்துப் பாராட்டிய பாங்கு அவரது மனிதாபிமான தானம்.
பாராட்டும் பண்பைப் பரவலாக்கினால் அருஞ்செயல்கள் அரங்கேறும்.
இறைவா! எல்லாரிடத்தும் பண்போடு அணுக, பரிவோடு நடத்த, பாசத்தோடு பேச, பணிவான மனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்