தேடுதல்

முடக்குவாதமுற்றவரை மாடி வழியாக இயேசுவிடம் அனுப்பிய நண்பர்கள் முடக்குவாதமுற்றவரை மாடி வழியாக இயேசுவிடம் அனுப்பிய நண்பர்கள் 

தடம் தந்த தகைமை - உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன

மன்னிப்பதற்கான விருப்பமே மன்னிப்பின் முதற்படி. மன்னிக்கத் தெரிந்தவர்களே கடவுளின் முகத்தைக் காட்டுகிறார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

முடக்குவாதமுற்றவரை நோக்கி இயேசு, மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, என கூறுகிறார்.

ஒரு மனிதர் படுக்கையாகிப் போனார். அவருக்கு முடக்குவாதம். அவருக்கு உதவிட யாருமில்லை. மருந்து பார்க்கவோ அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ எவ்வழியுமில்லை. கப்பர்நாகூம் பகுதியில் இயேசு ஓர் இலவச அரசு மருத்துவர்போல் பார்க்கப்பட்டார். அவர் இருந்த வீட்டிற்குள்ளும் வெளியேயும் கட்டுக்கடங்காக் கூட்டம். நன்மனங்கொண்ட நால்வர் முடக்குவாதமுற்ற நபரைத் தூக்கிச் சுமந்து வந்தது கண்டும் கூட்டம் இம்மியும் நகரவில்லை. இலவசமென்றால் எப்படி வாங்க வேண்டுமென்று நமக்குச் சொல்லியாத் தர வேண்டும்?

முடக்குவாதமுற்றவரைத் தூக்கிச் சுமந்த நால்வரும், வீட்டின் கூரையை உடைக்கத் துணிந்த வீட்டு உரிமையாளரும் வெகு பாராட்டிற்குரியவர்கள். தன் முன் ஒரு மனிதர் படுக்கையோடு இறக்கப்படுவதைக் கண்டு இயேசு அவர் மீது இரக்கம் கொண்டார். அவர்

முடங்கிப்போனது நோயால் மட்டுமின்றி கடந்த காலப் பாவத்தினாலும் என உள்ளுணர்ந்தார். அதைப் பற்றி அந்நேரத்தில் அவரோடு விவாதித்துக் கொண்டிராமல் அவருக்குத் தேவை 'பாவ விடுதலை” என்றறிந்து 'மகனே!” என்றழைத்து, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என மாண்போடு சொன்னார்.

மன்னிப்பதற்கான விருப்பமே மன்னிப்பின் முதற்படி. மன்னிக்கத் தெரிந்தவர்களே கடவுளின் முகத்தைக் காட்டுகிறார்கள்.

இறைவா! மன்னிப்பு கேட்பவரை மட்டுமின்றி, மன்னிப்பு கேளாதவரையும் மன்னிக்கும் மனம் தாரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2024, 13:42