கிறிஸ்தவ-இஸ்லாமிய உறவை வளர்க்கும் வகையில் கோடைப் பள்ளி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ஹென்றி மார்ட்டின் நிறுவனம் அண்மையில் 2024-ஆம் ஆண்டிற்கான கிறிஸ்தவ-இஸ்லாமிய உறவுகள் பற்றிய கோடைகால பள்ளியை நடத்தியுள்ளது என்று கூறுகிறது ICN செய்தி நிறுவனம்.
மேலும் இந்நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி மே 4-ஆம் தேதி வரை நடைபெற்றது என்று கூறும் அச்செய்திக் குறிப்பு, வாழ்க்கை உரையாடல், நடவடிக்கை உரையாடல், துறவு வாழ்வு அனுபவ உரையாடல், மற்றும் இறையியல் பரிமாற்ற உரையாடல் என இது இஸ்லாமியர்களுடன் கொள்ளவேண்டிய நான்கு வகையான உரையாடலின் அவசியத்தை மையமாகக் கொண்டது என்றும் உரைக்கிறது.
இந்தக் கோடைக்காலப் பள்ளியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான திருமதி சுனந்தா விக்டர், உரையாடல் என்பது ஒருவருக்கொருவர்மீதான தொடர்புகளின் ஒரு வடிவமாகும் என்றும், இது ஒரு ஆழமான தனிப்பட்ட தொடர்பை நிறுவுகிறது என்றும் தனது கற்றல் அனுபவத்தை இச்செய்தி நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டார் எனவும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம்.
மேலும், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த தனிநபர்களிடையே ஒருவருக்கொருவர்மீதான புரிதல் மற்றும் அமைதியான சகவாழ்வை ஊக்குவிப்பதில் உரையாடல் என்பது மரியாதை மற்றும் நட்பு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறது என்று மேலும் திருமதி சுனந்தா கூறியதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒன்று கூடி செவிமடுக்கவும், ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவும், மதிக்கவும், சிறந்ததொரு நோக்கத்திற்காக ஒத்துழைக்கவும் வேண்டும் என்று இந்நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பாக்கியம் டி சாமுவேல் அவர்களும் வலியுறுத்தியுள்ளார். (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்