தேடுதல்

அன்னையர் தின வாழ்த்து அட்டை அன்னையர் தின வாழ்த்து அட்டை  

நேர்காணல் - அகில உலக அன்னையர் தினம்

அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். எல்லாருடைய வாழ்விலும் தாயின் பங்கு அளப்பரியது. அன்னை என்ற சொல்லின் வலிமை மிகப்பெரியது. அன்னையின் பாசத்திற்கு மயங்காதவர் இவ்வுலகில் எவருமிலர்.
நேர்காணல் - அகில உலக அன்னையர் தினம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த சொல் அம்மா. எதிர்பார்ப்பில்லா உறவின் அடையாளம் அம்மா. அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். எல்லாருடைய வாழ்விலும் தாயின் பங்கு அளப்பரியது. அன்னை என்ற சொல்லின் வலிமை மிகப்பெரியது. அன்னையின் பாசத்திற்கு மயங்காதவர் இவ்வுலகில் எவருமிலர். இத்தகைய சிறப்புமிக்க அன்னையர் தினம் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் ஆசிரியை விண்ணரசி.

சென்னை சூளைமேட்டில் உள்ள ஜீவிதம் ட்ரஸ்டின் நிறுவனரான ஆசிரியை விண்ணரசி அவர்கள், ஒய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. இவர் யாரிடமும் எந்தவிதமான நிதியுதவியும் பெறாமல், தன்னுடைய ஆசிரியப்பணியின் உழைப்பில் கிடைத்த ஊதியம் மற்றும் தற்போது பெறும் ஓய்வூதியம் இவற்றைக் கொண்டுமட்டுமே கடந்த 10 வருடங்களாக இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதுவரை 150க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், கைம்பெண்கள் மற்றும் தேவையிலிருக்கும் ஏழைகள் என பலருக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்து, இந்த ட்ரஸ்ட் வழியாக உதவி செய்து வருகின்றார். மேற்குறிப்பட்டவர்களுக்காக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆற்றுப்படுத்தும் பணி, அவர்களது தன்னம்பிக்கையையும், தலைமைத்துவத்தையும் வளர்க்கும் முகாம் போன்றவற்றைச் செய்து வருகின்றார். தனது இத்தகைய சமூக சேவைக்காக இரண்டு விருதுகளும், சிறந்த ஆசிரியருக்கான விருதினை மூன்று முறையும் பெற்றுள்ளார். ஆசிரியை விண்ணரசி அவர்களை அன்னையர் தினம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2024, 16:52