தேடுதல்

கர்தினால் Pierbattista Pizzaballa கர்தினால் Pierbattista Pizzaballa   (Vatican Media)

காசாவிற்கு நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பைக் கொணரும் கர்தினால் Pizzaballa

கர்தினால் Pizzaballa அவர்கள், காசாவுக்கான தனது சந்திப்பு நிறைந்த மகிழ்வைத் தந்ததாகவும், இம்மக்களுக்காக விசுவாசிகள் அனைவரும் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், காசா மீது திருத்தந்தை கொண்டிருக்கும் தனிப்பட்ட அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் திருக்குடும்ப பங்குத்தளத்திற்குச் சென்ற எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa அவர்கள், அங்கிருக்கும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் திருஅவையின் நெருக்கத்தை வெளிப்படுத்தி ஒன்றிப்பு மற்றும் ஆதரவின் செய்தியை வழங்கினார் என்று அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களை ஊக்குவிப்பதற்காகவும், நம்பிக்கை, ஒன்றிப்பு, மற்றும் ஆதரவின் செய்தியை வழங்குவதற்காகவும் அவர் அங்குச் சென்றதாக இலத்தீன் வழிபாட்டுமுறை  தலைமையிடம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 16, இவ்வியாழன்று காசாவிற்குச் சென்ற கர்தினால் Pizzaballa அவர்கள், புனித திருக்குடும்ப பங்குத்தளத்தில் நிகழ்ந்த திருப்பலிக்குத் தலைமை தாங்கினார் என்றும், அதனைத் தொடர்ந்து அவர் தங்கியிருந்த நாட்களில், புனித Porphyrius  ஆர்த்தடாக்ஸ் பங்குத் தளத்திற்கும் சென்றார் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்துக் காணொளிக்காட்சி ஒன்றில் உரையாற்றியுள்ள கர்தினால் Pizzaballa அவர்கள், தனது சந்திப்பு நிறைந்த மகிழ்வைத் தந்ததாகவும், இம்மக்களுக்காக விசுவாசிகள் அனைவரும் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், காசா மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2024, 15:57