ஈராக்கின் மொசூல் நகருக்குத் திரும்பியுள்ள 10 கிறிஸ்தவக் குடும்பங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மதத் தீவிரவாதம் மற்றும் வன்முறைக் காரணமாக ஈராக் நகரமான மொசூலில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு, மிகச் சில கிறிஸ்தவ குடும்பங்களே மீண்டும் தாயகம் திரும்பியுள்ளன என்று கூறியுள்ளார் அதன் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் Amel Shimon Nona.
வத்திக்கானின் ஃபீதேஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள பேராயர் Nona அவர்கள், IS எனப்படும் இஸ்லாமிய அரசு நடத்திய வன்முறை காரணமாக 1,200 கிறிஸ்தவக் குடும்பங்களில் பெரும்பான்மையானவர்கள் மொசூல் நகரை விட்டு வெளியேறினர் என்றும் உரைத்துள்ளார்.
உச்சக்கட்ட போரின்போது, தானும் தன்னுடன் இருந்த தனது அருள்பணியாளர்களும் நினிவே சமவெளி பகுதிகளிலுள்ள கிராம்லெஸ் மற்றும் தில்கிஃப் போன்ற கிராமங்களில் தஞ்சம் புகுந்ததாகவும் இந்நேர்காணலின்போது கூறினார் பேராயர் Nona.
மொசூல் நகரத்தை IS அமைப்பினர் ஆக்கிரமித்தபோது, தூய ஆவியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட எங்கள் கோவில், திருடர்களின் கும்பல்களால் சூறையாடப்பட்டது என்று கூறிய பேராயர் Nona அவர்கள், இருப்பினும், இஸ்லாமிய போராளிகள் என்று அழைக்கப்பட்ட எங்களுக்கு அருகில் வசிக்கும் இஸ்லாமியக் குடும்பங்கள் தலையிட்டு இந்தக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்