தேடுதல்

சீடர்களுடன் இயேசு சீடர்களுடன் இயேசு 

தடம் தந்த தகைமை - கடுகளவு நம்பிக்கை

மாற்றங்களுக்கான முதல் தேவை மனநம்பிக்கை. அதன் மகத்துவத்தை மனதார உணர்ந்தே இயேசு “உங்களால் முடியாதது ஒன்றும் இராது” (மத் 17:20) என்ற மந்திரச் சொல்லை உதிர்க்கின்றார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

“கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும், என்றார் இயேசு.

உரோமையரின் அராஜக ஆட்சி, அவர்களோடு கைகோர்த்த யூதர்களின் அதிகார ஆதிக்கம்ää தங்களை வாட்டி வதைத்த ஏழ்மை என எல்லாம் சேர்ந்து பாமரர் மிகப் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் தங்கள் நல்வாழ்வு மீதான அவநம்பிக்கை ஒருபுறம். இவற்றைத் தாண்டிக் கடந்து செல்ல இயேசு காட்டிய அறநெறிகளின் மீதான சந்தேகம் மறுபுறம். இவை இரண்டும் சாமானிய மனம் கொண்ட சீடருக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தியது. அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்தவே இயேசுவின் 'கடுகளவு நம்பிக்கை' சொல்.

மாற்றங்களுக்கான முதல் தேவை மனநம்பிக்கை. அதன் மகத்துவத்தை மனதார உணர்ந்தே இயேசு “உங்களால் முடியாதது ஒன்றும் இராது” (மத் 17:20) என்ற மந்திரச் சொல்லை உதிர்க்கின்றார். “துணிவும் தன்னம்பிக்கையுமே முடிவு எடுத்தலின் ஆதாரங்கள்” என்பார் மைக் கிரிய்வெஸ்கி. சமத்துவ சமூகம் பற்றிய உறுதியான நம்பிக்கை நம் கண்முன் இருந்தால் மலையோ, மடுவோ, மரமோ எவை முன்னிருந்தாலும் நகர்த்திச் செல்லும் வலிமை நமக்குள்ளே என்பதே இயேசுவின் நன்மொழி. நம்பிக்கையுடன் நடந்தால் எல்லாம் சாத்தியமே.

இறைவா! என்னை நம்பிக்கையில் வேரூன்றச் செய்து மாற்றங்கள் எனும் கனிகளை ஈயும் மனிதராக்கும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2024, 11:44