தேடுதல்

இயேசுவின் திருஇதயம் இயேசுவின் திருஇதயம் 

நேர்காணல் – ஆண்டவர் இயேசுவின் திருஇருதயப் பெருவிழா

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரே-லி-மோனியால் என்ற இடத்தில் வாழ்ந்த துறவற சபையைச்சேர்ந்த அருட்சகோதரி மார்கரெட் மேரி என்பவர் 1673 முதல் 1675 வரை கண்ட, பல தெய்வீக காட்சிகளின் விளைவாக இப்பக்தி உருவானது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அன்பின் அடையாளம் இதயம். கடவுள் நம் அனைவர் மேலும் கொண்டிருக்கக்கூடிய அன்பின் அடையாளம் தான் இயேசுவின் திருஇதயம். அந்த அன்பு இயேசுவின் பாஸ்கா மறைநிகழ்ச்சியில் வெளிப்பட்டதை, இவ்விழா நமக்குக் கூறுகின்றது. சிலுவையில் குத்தித் திறக்கப்பட்ட இயேசுவின் திருவிலாக்காயத்தையும், அவரது பாடுகளையும் குறிக்கும் வண்ணம், திருஇதயத்தில் ஒரு காயமும், அதற்கு சற்றுமேலே முள்முடியும், அதன்மேல் திருச்சிலுவையும் காணப்படுகிறது. திருஇதயத்தின் மேல் பற்றியெரியும் தீச்சுடர், இயேசுகிறிஸ்து நம்மேல் கொண்டிருக்கிற அதிகமான அன்பை அடையாளப்படுத்துகின்றது. இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாவிற்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமையில் இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்படுகின்றது. இறைவனின் அதிகப்படியான அன்பையும், தவறுகளை மன்னிக்கின்ற தாராள குணத்தையும் இயேசுவின் இதயத்தில் நாம் பார்க்கிறோம்.

திரு இதய ஆண்டவர் பக்திமுயற்சி 13 மற்றும் 14 நூற்றாண்டுகளில் பரவத்தொடங்கியது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரே-லி-மோனியால் என்ற இடத்தில் வாழ்ந்த துறவற சபையைச்சேர்ந்த அருட்சகோதரி மார்கரெட் மேரி என்பவர் 1673 முதல் 1675 வரை கண்ட, பல தெய்வீக காட்சிகளின் விளைவாக இப்பக்தி உருவானது. இந்தக்காட்சிகளில் ஆண்டவர் இயேசு, திரு இருதய விழாவை, திருவுடல் திரு இரத்தப்பெருவிழாவிற்குப் பிறகு உள்ள வெள்ளிக்கிழமையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று, காட்சியில் சொன்னார். திருத்தந்தை 13 ம் கிளமெண்ட் இதை 1765 ஆம் ஆண்டில் அங்கீகரித்தார். 1865ஆம் ஆண்டில் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவ்விழாவினை கட்டாய விழாவாக திருஅவை முழுவதும் அறிமுகப்படுத்தினார்.

இன்றைய நமது நேர்காணலில் திருஇருதய பெருவிழா பற்றிய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி பிலிப் பென்சி. நற்கருணை சபையை சார்ந்த அருள்பணி பிலிப் பென்சி அவர்கள் 2006ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 2 ஆண்டுகள் சபையின் இந்தியா மாகாண பொருளாளர், ஆலோசகர், சபையின் ஆலோசகர் மற்றும் பொருளாளராக பணியாற்றிய தந்தை அவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் அச்சபையின் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை திருஇருதயப் பெருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

நேர்முகம் - நற்கருணை சபையை சார்ந்த அருள்பணி பிலிப் பென்சி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2024, 16:36