தேடுதல்

மௌனத்தில் உரையாடுவோம் மௌனத்தில் உரையாடுவோம்  (ANSA)

தடம் தந்த தகைமை – ‘ஆம்’ என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்றால் ‘இல்லை’

எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருந்த ரபிகளுக்கு மத்தியில் தம் சீடர்கள் சுருங்கப் பேசி, சுயத்தோடு வாழ வேண்டும் என்பது இயேசுவின் உருவாக்கப் பாணியாக இருந்தது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது (மத் 5, 37) என்றார் இயேசு.

நீண்ட வாசிப்புகள், நீண்ட விளக்கங்கள், நீண்ட செபங்கள் எல்லாம் யூத ரபிகளுக்குக் கைவந்த கலை. இத்தகு 'நீண்டவைகளுக்கு' ஏற்பவே அவர்களின் வாழ்வுமுறை அமைந்தது. அவை சலிப்பையும் சங்கடத்தையும் சமூகத்திற்குள் ஏற்படுத்தின. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருந்த ரபிகளுக்கு மத்தியில் தம் சீடர்கள் சுருங்கப் பேசி, சுயத்தோடு வாழ வேண்டும் என்பது இயேசுவின் உருவாக்கப் பாணியாக இருந்தது.

இங்கிலாந்தில் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்லூரி விழாவிற்குத் தலைமை தாங்கி, சிறப்புரை நிகழ்த்த அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அழைக்கப்பெற்றார். அவ்விழாவிற்குச் சென்ற அவர் பேச எழுந்ததும் மாணாக்கரிடையே

எதிர்பார்ப்புமிக்கப் பெருத்த ஆரவாரம் எழுந்தது. பேச்சுமேடையில் நின்றுகொண்டு Never Never Never Give up என மட்டும் சொல்லி உரையை நிறைவு செய்தார். மிகச் சிறந்த, சுருக்கமான உரை இது என உலகே வருணித்தது.

இப்பண்பு நம்முள் பரவலாக்கப்பட வேண்டியதல்லவா! நம் வாய் திறந்த பேச்சு, நம் வாழ்வைப் பற்றிய முகவரி.

இறைவா! சுருக்கமாகப் பேசி உம்மோடும் பிறரோடும் நெருக்கமாக வாழும் கலையைக் கற்றுத் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2024, 15:04