தேடுதல்

பணிகள் தொடர்கின்றன பணிகள் தொடர்கின்றன  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – இறையடியார் அன்னம்மாள் – முதல் பாகம்

கைம்பெண்களின் எதிர்கால வாழ்வு குறித்து ஆழ்ந்த கவலையும், அக்கறையும் கொண்டு, 1858 ஆம் ஆண்டு திருச்சி புனித அன்னாள் துறவு சபை துவக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தனக்கென வாழாது, பிறருக்கென வாழ்ந்த கைம்பெண் அன்னம்மாள், சுற்றி வாழ்ந்த ஏனைய கைம்பெண்களுக்கு நம்பிக்கையைத் தந்தவர். திருச்சி மறைமாவட்டத்தில் அதிகரித்து வரும் இளம் கைம்பெண்களின் எதிர்கால வாழ்வு குறித்து ஆழ்ந்த கவலையும், அக்கறையும் கொண்டு, 1858 ஆம் ஆண்டு - பிப்ரவரி 2 ஆம் நாள், ஐந்து கைம்பெண்களுடன் திருச்சி மேலப்புதூரில், திருச்சி புனித அன்னாள் துறவற சபையைத் துவக்கினார். கைம்பெண்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் மறுவாழ்வு அளிப்பதும் முதன்மை நோக்கமாக மாறின. இந்த இறையடியார் அன்னம்மாவின் புனிதர் பட்ட நிலைகளுக்கான படிநிலைகளைக் கவனித்து வருபவர் கோட்டாறு மறைமாவட்ட அருள்பணி ஜான் குழந்தை. இவர் இது தொடர்பாக உரோம் நகர் வந்தபோது இறையடியார் அன்னம்மாவை புனிதராக உயர்த்துவதற்கான படி நிலைகள் குறித்து நம்மோடு உரையாடினார். திருச்சி புனித அன்னாள் துறவற சபை துவக்கப்பட்டதன் பின்னணி குறித்து இன்றைய முதல் பகுதியில் தருகிறோம்.

இறையடியார் அன்னம்மாள் - உரை வழங்குபவர் அருள்பணி ஜான் குழந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2024, 11:52