தேடுதல்

இயேசு சபையினரின் இலச்சினை இயேசு சபையினரின் இலச்சினை 

பங்களாதேசில் இயேசு சபையினரின் நவதுறவு இல்லம்

பங்காளதேஸ், கிறிஸ்தவர்களை மிகக் குறைவான எண்ணிக்கையிலும், இஸ்லாமியர்களை அதிக எண்ணிக்கையிலும் கொண்டது

மெரினா ராஜ் - வத்திக்கான்

பங்களாதேசத்தில் உள்ள தலத்திருஅவை மிகவும் ஏழ்மையான மிகக்குறைவான வளங்கள் கொண்டது என்றும், துறவற ஆன்மிக மனம் படைத்த அப்பகுதி கிறிஸ்தவர்கள் மத்தியில் இயேசு சபையினரின் நவதுறவு இல்லம் உருவாக்கப்படுவது கடவுளின் கருணை என்றும் கூறினார் அருள்பணியாளர் Ripon Rozario

ACN எனப்படும் தேவையில் இருக்கும் தலத்திருஅவையினருக்கு உதவும் அமைப்பினரின் உதவியோடு வங்காளதேசத்தில் ஜூலை 16 செவ்வாய்க்கிழமையன்று திறக்கப்பட உள்ள இயேசு சபையின் நவதுறவு இல்லம் குறித்து இவ்வாறு கூறியுள்ளார் அவ்வில்லத்தின் தலைவர் அருள்பணி Ripon Rozario.

பங்காளதேஸ் கிறிஸ்தவர்களை மிகக் குறைவான எண்ணிக்கையிலும், இஸ்லாமியர்களை அதிக எண்ணிக்கையிலும் கொண்டது என்று கூறிய அருள்பணி Rozario அவர்கள், இங்குள்ள கத்தோலிக்க தலத்திருஅவையானது கல்வி, மருத்துவம், போன்ற துறைகளில் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது என்றும் கூறினார்.

பங்காளதேசில் உள்ள தலத்திருஅவையானது ஆன்மிகத்துடிப்பு கொண்டது, உள்ளூர் கலாச்சாரம் மற்றும் உள்ளூர் மொழிகளில் ஆரம்ப உருவாக்கம் இருந்தால் நல்லது என்று உணர்ந்து இப்பகுதியில் துறவற இல்லம் உருவாக்க முடிவு செய்ததாகக் கூறினார் அருள்பணி ரொசாரியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2024, 13:07