தேடுதல்

பாகாலை வழிபட்டோரை  அழிக்கும் ஏகூ பாகாலை வழிபட்டோரை அழிக்கும் ஏகூ  

தடம் தந்த தகைமை – பாகால் வழிபாட்டை ஒழித்த அரசன் ஏகூ

ஏகூ காவலர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி, “நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பி ஓடிவிடாமல், எல்லாரையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்றான்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏகூ பாகால் ஊழியர்களை நோக்கி, “உங்களிடையே ஆண்டவரின் அடியார்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பாருங்கள்! இங்கே பாகாலின் அடியார்கள் மட்டுமே இருக்கவேண்டும்” என்றான். பிறகு, அவர்கள் பலிப்பொருள்களையும், எரிபலிகளையும் செலுத்த உள்ளே நுழைந்தார்கள். ஆனால், ஏகூ எண்பது காவலரை வெளியே நிறுத்தி வைத்து, “உங்கள் கையில் அளிக்கப்போகிற ஆள்களில் எவனையாவது நீங்கள் தப்பியோட விட்டால், அவனுக்குப் பதிலாக உங்கள் உயிரை இழப்பீர்கள்” என்று கூறியிருந்தான். எரிபலி முடிந்தவுடன் ஏகூ காவலர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி, “நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பி ஓடிவிடாமல், எல்லாரையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்றான்.

அதன்படியே காவலர்களும், படைத்தலைவர்களும் அவர்களை வாளுக்கு இரையாக்கி, அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்த பின், பாகால் கோவிலின் உள்ளறைக்குச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த பாகாலின் சிலைத் தூண்களை வெளியே கொண்டுவந்து எரித்துப்போட்டனர். இவ்வாறு, பாகாலின் சிலைத் தூண்களை எரித்து, ஏகூ இஸ்ரயேல் நாட்டினின்று பாகால் வழிபாட்டை அறவே ஒழித்தான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2024, 12:16