தேடுதல்

தேசிய நற்கருணை மாநாட்டில் இளைஞர்கள் தேசிய நற்கருணை மாநாட்டில் இளைஞர்கள் 

கிறிஸ்துவின் உடல் உறுப்புக்களாகிய நாம் முக்கியமானவர்கள்

பொறுப்புடைமை உண்மையின் கருவி, அதுவே நல்லிணக்கச் செயல்பாடுகளுக்கான அடிப்படை. - பேராயர் Timothy Broglio.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இளைஞர்கள் தங்கள் தவறுகளுக்காக மனம் வருந்தி, இணக்கமாகி, இரக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவின் உடலின் உறுப்புக்களாகிய நாம் ஒவ்வொருவரும் மிகவும் முக்கியமானவர்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Timothy Broglio.

ஜூலை 19 வெள்ளிக்கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் Indianapolis உள்ள Lucas Oil Stadium த்தில் நடைபெற்ற தேசிய நற்கருணை மாநாட்டில் இளையோர்க்காக நிறைவேற்றிய திருப்பலியின்போது இவ்வாறு கூறியுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவ சேவைகளுக்கான ஆயரும் ஆயர் பேரவைத்தலைவருமான பேராயர் Timothy Broglio.

ஆயிரக்கணக்கான இளையோர் பங்கேற்ற அத்திருப்பலியில் நாட்டில் மற்றும் உலகில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்து எடுத்துரைத்துள்ள பேராயர் Broglio அவர்கள், ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றைக் குறித்து அவர்களுக்கு உரையாற்றியுள்ளார்.

ஒவ்வொரு பணியும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் அவரவரது துணிவைப் பொறுத்தே அமைகின்றது என்றும், கெத்சமனிக்குள் என்ற தலைப்பை முன்னிறுத்தி நமது பணி ஒரு கடினமான பணியாகத் தோன்றினாலும், ஒவ்வொரு பணியும் அதை ஏற்றுக்கொள்வதற்கான நமது விருப்பத்துடன் தொடங்கி அருளில் வளர்வதற்காக முன்னேறிச் செல்கின்றது என்றும் கூறியுள்ளார்.

பொறுப்புடைமை உண்மையின் கருவி, அதுவே நல்லிணக்கச் செயல்பாடுகளுக்கான அடிப்படை என்று வலியுறுத்தியுள்ள பேராயர் Timothy Broglio அவர்கள், "நம்முடைய பாவங்களை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, நாம் நமது செயல்களை மன்னித்து, நமது தவறான செயல்களுக்குக் காரணமாக மற்றவர்களைக் கூறுகின்றோம் என்றும் கூறியுள்ளார்.

செபம், வழிபாடு, கற்றல் ஆகியவற்றிலிருந்து வெளியே செல்லும்போது நமது பார்வைகள் புதுப்பிக்கப்படும் என்றும், நமது உடன் சகோதர சகோதரிகள் மீதான பொறுப்பை, திருமுழுக்கு அருளடையாளம் வழியாக நாம் பெற்ற பொறுப்பினை உறுதி செய்பவர்களாக மாறுவோம் என்றும் கூறியுள்ளார்.

அனைத்து நாடுகளும் அறியும் வண்ணம் கடவுளின் இரக்கத்தை உருவாக்கும் நமது உள்ளார்ந்த விருப்பத்தை மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் அனுபவம் வெளிப்படுத்தும் என்றும்  கூறியுள்ளார் பேராயர் Timothy Broglio.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2024, 14:37