தேடுதல்

அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு  (ANSA)

பெருமழையால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமுக்கு உதவ காரித்தாஸ் தயார்

பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் ஆற்ற, அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக தெரிவிக்கிறது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடர்ந்து பெய்துவரும் பெருமழையால் 29 மாவட்டங்களின் 2800 கிராமங்களில் 16 இலட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், அவர்களிடையே தன் பணிகளைத் துவக்க தயாராக உள்ளது இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

களத்தில் இறங்கி மக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் ஆற்ற இந்திய காரித்தாஸ் அமைப்பு தயாராக இருப்பதாகவும், அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் உரைத்த அக்கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்தின் அதிகாரி Jonas Lakra அவர்கள், அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில் தங்களின் அரசு சாரா அமைப்புக்களின் உதவியுடன் நிலைமையை ஆய்வுச் செய்துவருவதாகவும் தெரிவித்தார்.

அரசு அமைப்புக்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு, முகாம்களை அமைத்துவருவதாகவும் தன் பாராட்டுக்களை வெளியிட்ட இந்திய காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி லாக்ரா அவர்கள், இதுவரை அரசால் 181 முகாம்களும் 334 நிவாரண பொருள் விநியோக மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெருமழையின் காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரை உடைந்து கிராமங்களை பாதிக்கும் அபாயம் இருப்பதையும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றது அஸ்ஸாம் அரசு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2024, 15:57