பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ள பெரில் சூறாவளி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பெரில் சூறாவளியால் ஏற்பட்ட தாக்கம் மக்கள் மனதில் பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், பதட்டங்கள், கவலைகள் போன்றவற்றிற்கு மத்தியில் நம்பிக்கையின் தருணங்களாக ஒன்றிணைந்து செயல்படும் உள்ளத்தையும் தந்துள்ளது என்றும் கூறியுள்ளார் ஆயர் Clyde Martin Harvey.
ஜூலை 4 அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள Grenada தீவுப்பகுதிகளான Carriacou மற்றும் Petite Martinique பகுதிகளில் ஏற்பட்ட பெரில் சூறாவளி பற்றி வானொலி, மற்றும் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பில் இவ்வாறு கூறியுள்ளார் தூய ஜார்ஜ் மறைமாவட்ட ஆயர் Clyde Martin Harvey.
பெரில் சூறாவளி காலத்தில் உயிர் இழப்புகளைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட பரவலான ஏற்பாடுகளுக்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஆயர் அவர்கள், உடனடி உதவி, தேவையிலிருப்போர், காணாமல் போனவர்களைத் தேடுதல் போன்றவற்றில் தலத்திருஅவை மற்றும் காரித்தாஸ் ஊழியர்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூர் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அவசர நடவடிக்கைக் குழு பல இடங்களில் செயல்பட்டு வருவதாகவும், கரியாகோ தீவில் அவசர மருத்துவமனை அமைப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் வேலை செய்து வருவதாகவும் எடுத்துரைத்துள்ளார் ஆயர் ஹார்வி.
பெர்லி சூறாவளியினால் இதுவரை இரண்டு இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மின்சார வசதி இன்றி மக்கள் பெரிதும் துன்புறுவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட இவான் சூறாவளியின்போது தான் சந்தித்த உணர்வுகளை எடுத்துரைத்த ஆயர் ஹார்வி அவர்கள், அந்த நேரத்தில் ஆலயத்தின் உள்ளே தான் இருந்ததாகவும் ஏராளமான பொருள்சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்