நேர்காணல் – தூய கார்மேல் மலை அன்னை திருவிழா
மெரினா ராஜ் - வத்திக்கான்
பரமனை பாரிற்காக ஈன்றெடுத்த தியாகத்தின் உருவம் அன்னை மரியா, இயேசுவை ஞானத்தோடு வளர்த்து இறைப்பணியில் இரண்டறக் கலந்தவர். பரமன் படைப்பில் பாங்கான நிலையினைப் பெற்றவர். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மனித குலத்தின் மீட்பிற்காக இடைவிடாது இறைவனிடம் வேண்டுபவர். இத்தகைய பண்பு நலன்கள் நிறைந்த அன்னை மரியா பல்வேறு பெயர்களில் உலக மக்களால் போற்றி வணங்கப்படுகின்றார். அவ்வகையில் ஜுலை 16ஆம் நாள் தூய கார்மேல் அன்னையாக, உத்தரிய அன்னையாக் கொண்டாடப்படும் தூய கார்மேல் அன்னை விழா பற்றியக் கருத்துக்களை இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி பிரதீஸ் A கட்டார்.
தூத்துக்குடி மறைமாவட்ட அருள்பணியாளரான பிரதீஸ் A கட்டார் அவர்கள், அம்மறைமாவட்டத்தைச் சார்ந்த கொம்புதுறை பங்கிலுள்ள தூய முடியப்பர் ஆலயத்திலே பங்குப்பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். சீர்மிகு சிந்தனை, தெளிவான குரலில் பிறருக்கு அதனை எடுத்துரைக்கும் திறன், பங்குப்பணியில் ஆர்வம் கொண்டு சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தை அவர்களை தூய கார்மேல் மலை அன்னை திருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்