தேடுதல்

யெருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை யெருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை 

தலத்திருஅவையால் காசா மக்களுக்கென 40 டன் உணவு உதவிகள்

Gaza Stripன் Rafah நகரம் இஸ்ராயேல் இராணுவ முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவு உதவிகளை விநியோகிப்பதற்கான வழிகள் அடைக்கப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை தலைமைப்பீடமும், Order of Malta என்ற கத்தோலிக்க இறையாண்மை இயக்கமும் இணைந்து காசாவில் துன்புறும் மக்களுக்கென 40 டன் உணவு உதவிகளை அனுப்பியுள்ளன.

ஏற்கனவே உணவு உதவிகளை வழங்கியுள்ள நிலையில், தற்போது அனுப்பப்பட்டுள்ள உணவு உதவி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொட்டலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

Gaza Strip பகுதியின் தென்பகுதியில் உள்ள Rafah நகரம் இஸ்ராயேல் இராணுவத்தின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவு உதவிகளை விநியோகிப்பதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பிறரன்பு அமைப்புக்கள், துயரங்களை அனுபவிக்கும் மக்களைச் சென்று சந்திக்க முடியா நிலை உள்ளது என கவலையை வெளியிட்டுள்ளன.

வடக்கு காசா பகுதியில் உள்ள எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை தலைமை இல்லத்தின் விநியோக மையத்தால் வழங்கப்படும் இந்த உணவு உதவிகள், காசா பங்குதளம் வழியாக மக்களுக்கு வழங்கப்படும்.

உடனடித் தேவைகளை நிறைவுச் செய்யும் உணவு, சில காலம் வைத்து உண்ணும் உணவு, சத்துணவின்மையால் துன்புறும் குழந்தைகளுக்கான உணவு, அத்தியாவசியமான உதவிகள் என பல்வேறு தேவைகளை நிறைவுச் செய்யும் வகையில் பொட்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டாவது தவணையான உணவு உதவிகளைத் தொடர்ந்து, மருத்துவப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை வழங்க இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் இல்லம் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2024, 15:41