தேடுதல்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இலண்டனில் நடந்த பேரணி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இலண்டனில் நடந்த பேரணி 

காசாவில் இன அழிப்பு முயற்சிகள் முடிவுக்கு வர இலண்டன் பேரணி

பிரிட்டானிய அரசு இஸ்ராயேலுக்கு ஆயுதம் விற்பதை நிறுத்த வேண்டும், ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கு உதவ வேண்டும், அமைதிக்காக உழைக்கவேண்டும் என விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காசாவில் இன அழிப்பு முயற்சிகள் முடிவுக்கு வரவேண்டும் என்ற அழைப்புடன் ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் இலண்டன் நகரில் அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் புத்தமதத்தினரும், பல்வேறு அரசு சாரா அமைப்புக்களும் இணைந்து நடத்திய இந்த பேரணியில், பிரிட்டானிய அரசு இஸ்ராயேலுக்கு ஆயுதம் விற்பதை நிறுத்த வேண்டும், ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான அமைப்புக்கு உதவி வழங்க வேண்டும், அமைதிக்காக உழைக்கவேண்டும் என்ற விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன.

காசா பகுதியில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ராயேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் இதுவரை குறைந்தபட்சம் 38,098 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 87ஆயிரத்து 705 பேர் காயமடைந்துள்ளனர் என அப்பகுதியின் நல ஆதரவு மையங்கள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இப்பேரணி ஏற்பாடுச் செய்யப்பட்டது.

இப்பேரணியில் கலந்துகொண்டோருக்கு அதன் இறுதியில் உரையாற்றிய பிரிட்டானிய புதிய பாராளுமன்ற அங்கத்தினர்கள், காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியில் அமைதியைக் கொணர பிரிட்டனின் புதிய அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும், இஸ்ராயேலுக்கான இராணுவ ஆதரவை பிரிட்டன் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் விண்ணப்பித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2024, 15:33