பல்சுவை – இறைஊழியர் ஞானம்மா தாட்டிபத்ரி
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்பு நேயர்களே சென்னை தூய அன்னம்மாள் சபையின் நிறுவனரான இறைஊழியர் ஞானம்மா தாட்டி பத்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பணிகள் பற்றி இன்றைய நம் பல்சுவையில் காணலாம்.
இறைஊழியர் ஞானம்மா தாட்டி பத்ரி பற்றிய கருத்துக்களை இன்றைய நம் பல்சுவையில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்சகோதரி லீமா ரோசாரியோ. இறைஅறிவியல், ஆன்மிக உருவாக்கம், சமூகக் கலாச்சாரத்திறன், தலைமைத்துவம், மேலான்மை, உளவியல் மற்றும் ஆலோசனை போன்ற பல துறைகளில் பல பயிற்சிகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் நலச்சங்க உறுப்பினர், உருவாக்குனர், பள்ளி முதல்வர் என பல பொறுப்புக்களைத் திறம்பட ஆற்றிய அருள்சகோதரி லீமா ரோசாரியோ அவர்கள், சென்னை தூய அன்னாள் சபையின் தலைமை அன்னையாக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது சென்னை மாதவரத்தில் உள்ள தூய அன்னாள் கல்லூரியின் தலைவராக 2014ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் சகோதரி அவர்கள், ஏறக்குறைய 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மேலும், பல்வேறு மாத வார இதழ்களில் தனது கருத்துக்களைக் கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் வழங்கி வருகின்றார். இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னனி தொலைக்காட்சி நிகழ்வுகளில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். துறவிகள் மற்றும் அருள்பணியாளர்களுக்கு பல்வேறு கருத்தரங்குகள் வழியாக தனதுக் கருத்துக்களை எடுத்துரைத்து வரும் அருள்சகோதரி லீமா ரோசாரியோ அவர்கள், தலைமைத்துவம், மேலாண்மை, சாதனையாளர், பெண்கள் முன்னேற்றம் என பல துறைகளில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சகோதரி அவர்களை இறைஊழியரான ஞானம்மா தாட்டிபத்ரி பற்றி பகிர்ந்து கொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்