தேடுதல்

உக்ரைன் சிறார் உக்ரைன் சிறார்  (ANSA)

உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் ஆஸ்திரியா காரித்தாஸ்

ஒடெசா, டெர்னோபில், க்மெல்னிட்ஸ்கி ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் உக்ரேனிய குழந்தைகளுக்குக் கல்வி, விளையாட்டு, மற்றும் உளவியல் ஆதரவு அளிக்கவும் போரினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவர்களைக் காக்கவும் உதவுகின்றன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பாக படிப்பதற்கும், விளையாடுவதற்கும், தங்குவதற்குமான இடங்களை ஏற்பாடு செய்துள்ளது ஆஸ்திரியா காரித்தாஸ் அமைப்பு.

ஏவுகணைகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றால் மக்களும் அவர்கள் வாழுமிடங்களும்,  பாதிக்கப்பட்டு இரத்தமாக நாடே காட்சியளிக்கின்ற நிலையில் மக்களின் நிலை குழந்தைகளின் எதிர்காலம் இவற்றைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரிய காரித்தாஸானது இத்தகைய செயல்பாடுகளை போர் தீவிரம் குறைவாக உள்ள உக்ரைனின் Odessa, Ternopil மற்றும் Khmelnitsky பகுதிகளில் நிறுவியுள்ளது.

ஏறக்குறைய 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாழ்விடங்கள் உக்ரைன் குழந்தைகள் தங்களது சோகத்தை சிறிதளவு மறந்து விளையாட்டு, குழுச்செயல்பாடுகள், உளவியல் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றின் வழியாக தங்களது எதிர்கால வாழ்வை மாற்றியமைத்துக் கொள்ள இப்பள்ளிகள் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஆஸ்திரிய காரித்தாஸ் அமைப்பின் துணைத் தலைவர் அலெக்சாண்டர் போட்மேன்.

தொடர்ச்சியான மின்தடைகள், காலநிலை மாற்றம் போன்றவற்றினால் உக்ரைன் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இப்பள்ளிகள் ஆஸ்திரியா காரித்தாஸ் அமைப்பினரால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2024, 16:05