தேடுதல்

இஸ்ரயேலின் அரசனான யோவாசு இஸ்ரயேலின் அரசனான யோவாசு 

தடம் தந்த தகைமை – அசாவேலிடமிருந்து நகரைக் காப்பாற்றிய யோவாசு

அசாவேல் எருசலேமைத் தாக்கும் நோக்கில் புறப்பட்டு வந்தான். எனவே, யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்தான்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

சிரியா மன்னன் அசாவேல் காத்து நகரோடு போரிடச் சென்று அதைக் கைப்பற்றினான். பின்பு, அசாவேல் எருசலேமைத் தாக்கும் நோக்கில் புறப்பட்டு வந்தான். எனவே, யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும், தான் நேர்ந்தளித்திருந்த காணிக்கைகளையும் ஆண்டவர் இல்லம், அரச மாளிகை இவற்றின் கருவூலங்களில் காணப்பட்ட தங்கம் அனைத்தையும் எடுத்து சிரியா மன்னன் அசாவேலுக்கு அனுப்பினான்.

எனவே, அசாவேல் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றான். யோவாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன. யோவாசின் அலுவலர் அவனுக்கு எதிராகக் கிளம்பிச் சதித் திட்டம் செய்து சில்லாவுக்கு இறங்கிச் செல்லும் வழியில் மில்லோபேத்தில் அவனைக் கொன்றனர். அவனைக் கொன்ற அலுவலர் சிமயாத்தின் மகன் யோசக்காரும் சோமேரின் மகன் யோசபாத்தும் ஆவர். அவன் இறந்து தாவீதின் நகரில் தன் மூதாதையருடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் அமட்சியா அரசன் ஆனான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2024, 11:56