தேடுதல்

இயேசுவின் அழைப்பு இயேசுவின் அழைப்பு 

தடம் தந்த தகைமை - கலப்பையில் கை வைத்தபின்

நிபந்தனையற்ற அன்பே நிஜமானது. அவ்வாறே நிபந்தனையில்லாப் பின்பற்றுதலே நிறைவானது. அத்தகு பின்பற்றுதலே சீடத்துவத்தின் சிறப்பு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

ஒருவர் இயேசுவைப் பார்த்து, ஐயா, உம்மைப் பின்பற்றுவேன். ஆயினும் முதலில் நான்

போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் என்று கேட்க, இயேசுவோ, கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு

உட்படத் தகுதியுள்ளவர் அல்லர் (லூக் 9:61&62) என்றார்.

நிபந்தனையற்ற அன்பே நிஜமானது. அவ்வாறே நிபந்தனையில்லாப் பின்பற்றுதலே நிறைவானது. அத்தகு பின்பற்றுதலே சீடத்துவத்தின் சிறப்பு. எந்தச் சீடர் குடும்பப் பற்று, குவலயப் பற்று, பணம், பெண், மண், பதவிப் பற்று எனத் தன்னுள் கொண்டுள்ளாரோ அவரால் கடவுளை நெருக்கமாகப் பின்பற்றிட முடியாது. ஏனெனில் அவரது மனம் ஏனையவற்றைப் பற்றிக்கொண்டிருக்கும். அடுத்தவருக்காக அழைத்தலை ஏற்போர் ஆபத்தானவர்கள்.

அருள்பணி அல்லது துறவுநிலை ஏற்ற சிலர் சிரிப்போடு சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘நான் இந்த நிலைக்கு வர என் அம்மா, அப்பா நேர்ச்சை வெச்சாங்க’, ‘நீ சாமியாரா போகத்தான் லாயக்கு’, ‘நம்ம குடும்பத்திற்கு ஒரு சாமியார் வேண்டும்… நீ போப்பா-ன்னு சொல்ல நானும் வந்துட்டேன்’… என்று தன்னுள் இறையழைத்தலை உணராமல் யார் யாருக்காகவோ அருள்பணி ஏற்றவர்கள் பலருண்டு. அழைப்பு என்பது புனித வாழ்விற்கான தேர்வு, பிழைப்பிற்கான வழி அல்ல. அழைப்பு என்பது முழு அர்ப்பணிப்பில் உள்ளம் மகிழ்வது.

இறைவா! எவ்வித நிபந்தனையுமின்றி உம் பணி தொடர அருள் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2024, 13:11